கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயது பாட்டியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்..!

Share this post:

12

கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட 90 வயதான மூதாட்டி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சிகர சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

கொல்லம் மாவட்டத்தில் கடக்கல் பகுதியில், தனது கணவரை இழந்து கடந்த 20 வருடங்களாக தனிமையில் வசித்துவருகிறார் இந்த மூதாட்டி. இவரை, பாபு என்பவர் கத்திமுனையில் பாலியல் பலாத்காரம் செய்திருக்கிறார். இதுகுறித்து அந்த மூதாட்டி, ‘‘அவன், பின் கதவு வழியாக வீட்டின் உள்ளே நுழைந்து, கத்தியைக் காட்டி மிரட்டி என்னைப் பலாத்காரம் செய்தான். ‘என்னைத் துன்புறுத்த வேண்டாம்’ என அவனிடம் வேண்டிக்கொண்டேன். ஆனால், அவன் கேட்கவில்லை’’ எனக் கூறியிருக்கிறார்.

இந்தக் கொடூரச் சம்பவம் நிகழ்ந்து ஐந்து நாட்களுக்கு மேல் ஆகியுள்ளது. ஆனால், இன்றுதான் இது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மூதாட்டியின் உறவினர்கள் அவருக்கு முறையான சிகிச்சை மற்றும் சட்ட உதவி கொடுக்கத் தயாராக இல்லாததால், சம்பவம் தாமதமாக வெளிவந்துள்ளது எனக் கூறப்படுகிறது.

‘‘தற்போது முதலகட்ட விசாரணைக்குப் பிறகு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூதாட்டியின் உறவினர்கள் மற்றும் அருகில் வசிப்பவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளோம். விரைவில், குற்றவாளி கைதுசெய்யப்படுவான்’’ என கொல்லம் ஊரகக் காவல் கண்காணிப்பாளர் அஜிதா பேகம் தெரிவித்துள்ளார்.

ஆதிகளவில் நடக்கும் பாலியல் வன்முறை குறித்து உளவியல் நிபுணர் சித்ரா,‘‘ஒரு பக்கம், பாலியல் பற்றி அதிகமான தகவல்கள் இளைஞர்களுக்குக் கிடைக்கிறது. மறுபக்கம், பாலியல் பற்றி தெளிவான கல்வியை இளைஞர்களுக்கு அளிக்கத் தவறிவிட்டோம். பாலியல் என்பதை இலைமறை காயாகப் பேசவே நம் சமூகம் பழக்கப்பட்டிருக்கிறது.

சாப்பாடு, தண்ணீர்போல பாலியல் தொடர்பும் ஓர் அடிப்படை தேவைதான். ஆனால், இதை மறைத்துவைத்துப் பூதாகரமாக்கிவிட்டார்கள். ஒரு விஷயம், சாதாரணமாகக் கிடைக்க… நாம் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம். ஆனால், இதை நீ தொடவே கூடாது என மூடி வைக்கும்போது, ஆர்வம் ஏற்படும் அல்லவா? அதன் வெளிப்பாடுதான் பாலியல் பலாத்காரங்கள்.

பாலியல் தேவையை நம் சமூகம் வெளிப்படையாகப் பேசாததாலும், வீட்டில் கற்றுக்கொடுக்காததாலும் வன்முறைகள் அதிகரிக்கின்றன. இந்த வன்முறை புத்தி, குழந்தை என்றோ, மூதாட்டி என்றோ பார்க்காது. நம் சமுகத்தில் உடனடித் தேவை பாலியல் விழிப்பு உணர்வு’’ என்கிறார்

Share This:
Loading...

Related Posts

Loading...