தற்கொலை செய்து கொண்ட பிரபல திரை நட்சத்திரங்களும் அதற்கான காரணங்களும்..! (Photos)

Share this post:

aa

என்னதான் திரையில் மினு மினுவென மினுக்கும் திரை நட்சத்திரங்களின், திரைக்குப் பின் இருக்கும் தனிப்பட்ட வாழ்கை பெரும்பாலும் டல்லடித்துக் கொண்டுதான் இருக்கும்.

பலர் இந்த டல்லை தங்கள் திறமையால் எப்படியாவது பிரைட் ஆகி சாதித்து விடுவார்கள். ஆனால், சிலர் இந்த டல்லை எதிர்கொள்ள முடியாமல், சினிமாவை விட்டு வெளியேறி வேறு வழிகளில் சென்று விடுவர்.

இன்னும் சிலர் இந்த உலகத்தை விட்டே சென்று விட துனிந்துவிடுகின்றனர். அப்படி, தமிழ் சினிமா உலகில் நுழைந்து பேர் புகழ் பெற்றும், தனிப்பட்ட வாழ்வை தாக்குப் பிடிக்காமல் வாழ்கையை புறக்கனித்துச் சென்றவர்களைப் பற்றிய தொகுப்பு தான் இது.

ஷோபனா
வடிவேலுவுடன் ஜோடி போட்டு நம் அனைவரையும் குலுங்க குலுங்க சிரிக்க வைத்தவர் இந்த ஷோபனா. ‘சில்லுனு ஒரு காதல்’ உள்ளிட்ட பல படங்களில் வடிவேலுவுடன் காமெடியில் கலக்கி இருக்கிறார் ஷோபனா.

இவர், கடந்த 2011ம் ஆண்டு தனது 31வது வயதில், கோட்டூர்புரத்தில் இருக்கும் தன் வீட்டின் உள்ளேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது கடைசி காலத்தில், காதல் வாழ்கையில் நிலைபாடு இல்லையாம்.

உடல்நிலைக் குறைபாட்டால் இவருக்கு படவாய்ப்புகளும் குறைந்து விட்டதாம். எனவே இவர் மன அழுத்தத்தால் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்படுகிறது.
4

திவ்யா பாரதி
90களிலேயே தென்னிந்தியா சினிமாவில் இருந்து பாலிவுட் சென்றவர் திவ்யா பாரதி. இவர் தனது முதல் படத்தை தெலுங்கிலும், இரண்டாவது படத்தை சூர்யாவுடனும் நடித்தார்.

இதை அடுத்து இவர் நடித்த அத்தனை படமும் ஹிந்தி, தெலுங்கு தான். பாலிவுட்டில் படு பிஸியான இவர் 1993ல், மும்பையில் உள்ள துளசி அபார்ட்மெண்ட்ஸின் 5வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

19தே வயதில் இறந்த திவ்யா பாரதியின் சாவுக்குக் காரணம் இவருடன் நடித்துவந்த கோவிந்தா தான் என்று இவரது பெற்றோர் இன்றும் முனுமுனுத்து வருகின்றனராம்.
6

மோனல்
சிம்ரனின் தங்கை என்ற பட்டத்தோடு வந்த இவர் சினிமாவுக்குள் நுழைந்தார். மூன்றெ வருடத்தில் 10 படம் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

21 வயதான இவருக்கும் கொரியோகிராபர் பிரசன்னா சுஜித்துக்கும் இடையில் காதல் முறிவு ஏற்பட்டதால், வீட்டில் ஃபேனில் தூக்கு மாட்டித் தொங்கிவிட்டார்.
7

குணால்
காதலர் தினம் மூலம் அறிமுகமான குணால், தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்றார். இவர், 2008ம் ஆண்டு பிப்ரவரி 7ன் தேதி மும்பை அபார்ட்மெண்டில் இறந்து கிடந்தார்.

இவர் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்ற கோணத்தில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், இவர் கொலை செய்யப்பட்டதற்கான தடையங்கள் ஏதும் கிடைக்கவில்லை. எனவே இவர் 31 வது வயதில், காதல் தோல்வியால் இறந்ததாக அறிவிக்கப்பட்டது.
5

பிரத்யுஷா
சத்யராஜுடன் சவுண்டு பார்டி, மனு நிதி, தவசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் பிரத்யுஷா. இவரும் காதல்லால் தான் இறந்தார். இவரது காதலர் சித்தார்த ரெட்டியுடனான காதலை பெற்றோர் ஏற்றுக் கொள்ளாததால், இருவரும் காரினுள், கோக்கில் விஷம் கலந்து சாப்பிட்டு விட்டனர்.

பொது இடத்தில் இச்சம்பவம் நடந்ததால், பொதுமக்கள் இவர்களை கண்டு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி பிரத்யுஷா இறந்தார். அவரது காதலர் சித்தார்த் பிழைத்துக் கொண்டார்.
1

ஏ.சி. முரளி மோகன்
பால முருகன் என்று அழைக்கப்படும் இவர் தனது 44வது வயதில் தற்கொலை செய்து கொண்டார். கிட்டத்தட்ட 350 தமிழ் திரைப்படங்களில் தோன்றி புகழ் பெற்ற இவர் சன் டிவியில் சீரியலிலும் நடித்து வந்தார். இவரது எதற்கு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
2

சில்க் சுமிதா
90களின் தென்னிந்திய சினிமாவில் இன்று வரை பேசப்படும் ஒரு நடிகைகளில் ஒருவர் இவர்.. இவரது வாழ்கை பல மொழிகளில் படமாகவே வந்து விட்டது.
33

Share This:
Loading...

Recent Posts

Loading...