உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியை போலீசில் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்..!(வீடியோ)

Share this post:

ud

உடுவில் மகளிர் கல்லூரி அதிபர் இடமாற்றம் தொடர்பில் கடந்த மாதம் உடுவில் மகளிர் கல்லூரிமாணவியர் பெற்றோரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்களின் போது மில்க்கா மினாவதி என்னும் ஆசிரியை மாணவி ஒருவரை தாக்கிய வீடியோ ஊடகங்களில் வெளியான நிலையில் தாக்குதலுக்கு உள்ளாகிய மாணவி நேற்று முன்தினம் 11 -12 மணிக்கும் இடையில் சுன்னாகம் போலீசில் ஆசிரியைக்கு எதிராக முறைப்பாடு ஒன்றை பதிவு செய்தார் .

முறைப்பாட்டு அடிப்படையில் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சுன்னாகம் போலீசார் ஆசிரியையை நேற்றுமாலை 3 மணிக்கு விசாரணைக்காக போலீஸ் நிலையத்திற்கு அழைத்தனர் .ஆசிரியை மில்க்கா மினாவதியுடன் உடுவில் மகளிர் கல்லூரி பிரதி அதிபர் ஜீவந்தி அமலதாஸ் அவர்களும் சுன்னாகம் சமூகமளித்தவேளை அங்கே சட்டத்தரணி சஜந்தன் அவர்களும் அவரது உதவியாளர் ஒருவரும் பிரசன்னமாகி இருந்தனர் .

3 மணிநேரம் நீடித்த விசாரணையின் பின்னர் முறைப்பாடு செய்திருந்த மாணவி தனக்கு நடந்த கொடுமையை ஆசிரியை ஒத்துக்கொள்ளும் அதேநேரம் இனிமேல் இப்படியான வன்முறைகளில் ஈடுபடமாட்டேன் என ஏற்றுக்கொண்டு உறுதியளித்தால் தான்முறைப்பாட்டை மீளப்பெறுவதாக தெரிவித்ததை அடுத்து ஆசிரியை தன் பிழை உணர்ந்து ஒப்புக்கொண்டு அதை பொலிஸாருக்கு எழுத்துமூலம் தெரிவித்ததை அடுத்து ஆசிரியை விடுவிக்கப்பட்டார்.

முந்திக்கொண்டு சுன்னாகம் போலீஸ் நிலையத்துக்குள் நுழைய முற்பட்ட போது போலீசார் தடுத்து நிறுத்தினமையும் குறிப்பிடத்தக்கது .

மழை விட்டும் தூறல் விடவில்லை என்பது போல இப்போது ஆசிரியர்களுக்கு மாணவியர் வகுப்பெடுக்கும் காலம் மலர்ந்துள்ளது .இதை கலிகாலம் என்பதா ?அல்லது களிக்கலாம் என்பதா என தெரியாதுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

அரசியல்வாதிகளின் பின்னணிகளாலும் நம்பி மதவாதிகளின் பேராசைகளினாலும் மத வாதங்களினாலும் யாழ்ப்பாண கல்விச்சமூகமும் இப்போதெல்லாம் பாதிப்புகளை சந்திக்க தொடங்கி விட்டன என சிலர் புறுபுறுக்கவும் செய்கிறார்கள் .

Share This:
Loading...

Related Posts

Loading...