யாழ்ப்பாண போலீசார் யாழ் இளஞர்களுக்கு விடும் எச்சரிக்கை..! மீறினால் உடனடிக் கைது…!

Share this post:

il

இரவு வேளைகளில் தெருக்களில் இளைஞர்களை ஒன்று கூட வேண்டாமென யாழில் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவந்துள்ளது.இது தொடர் குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கத்தில் அமுலுக்கு வருகிறது .

யாழ் நகர் பகுதிகளில் இளைஞர்கள் தெருக்களில் நிற்பதாலும் போதைப் பொருள்பாவனை, மது பாவனை, மற்றும் அடிதடி சண்டைகள் இடம்பெற்று வருவதாலும் அப்பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு அதிகமாக பரவியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் இச்செயற்பாட்டால் பொலிஸாருக்கும் அப்பகுதி மக்களுக்கும் இடையே அடிக்கடி முரண்பாடுகள் ஏற்பட்டு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இப்பிரச்சினைக்கு பின்னர் நகர் பகுதிகளில் உள்ள இளைஞர்களை வீதிகளில் நிற்கவேண்டாமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான நிலையில் இரவு வேளைகளில் தெருக்களிலும்,தெருச்சந்திகளிலும் ஒன்று கூடும் இளைஞர்களை பொலிஸார் எச்சரிக்கை செய்ததுடன் மேலும் சில இளைஞர்களை கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...