காதல் ஆசை காட்டி சிறுமி ஒருவரை கூட்டாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த நபர்கள் – யாழில் சோகம்…!

Share this post:

sss

யாழ். பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 13 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் உட்பட 4 சந்தேகநபர்களை நேற்று கைது செய்துள்ளதாக பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

34 வயதுடைய சந்தேகநபர் ஒருவர், சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை காட்டி, தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று, தனது நண்பர்களுடன் சேர்ந்து சிறுமியைத் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த விடயத்தை வெளியில் தெரிவித்தால் கொலை செய்வேன் எனச் சிறுமியை மிரட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், நடந்த விடயத்தை சிறுமி, தனது தாயாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து, தாயார் இது தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

முறைப்பாட்டையடுத்து பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். எனினும், போதிய ஆதாரங்கள் இல்லையெனவும், பொய்யான முறைப்பாடு எனத் தெரிவித்தும் சந்தேகநபர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில், குறித்த விடயத்தைச் சமூக ஆர்வலர் ஒருவர், வடமாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.

இதனையடுத்து அவர் மேற்கொண்ட நடவடிக்கையின் அடிப்படையில் சந்தேகநபர்கள், நேற்று கைது செய்யப்பட்டுள்ள அதேவேளை, சிறுமி, மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...