சுவாதியை எனக்கு தெரியாது – இறக்கும் முன்னர் ராம்குமார் கைப்பட எழுதிய கடிதத்தால் பரபரப்பு! (கடிதம் இணைப்பு)

Share this post:

kk

சுவாதி படுகொலை வழக்கில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் மரணமடைந்தார்.

ராம்குமாரின் இந்த மரணம் தற்கொலை என்று பொலிஸாரும் சிறைத்துறையின் தரப்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் இது கொலை என பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர்.

இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று கடந்த 10ஆம் திகதி சிறையில் உள்ள ராம்குமாருக்கு அவரது வழக்கறிஞர் மூலம் கடிதம் ஒன்றை அனுப்பி ராம்குமாரின் பதில் கடிதத்தையும் பெற்றுள்ளது.

தற்போது ராம்குமார் இறந்துவிட்டதால், சிறையில் இருந்து ராம்குமார் அனுப்பிய அந்த கடிதத்தை குறித்த தொலைக்காட்சி தற்போது வெளியிட்டுள்ளது.

அதில் உள்ள தகவல்களால் பொலிஸ் தரப்பு கிலியில் உள்ளது.

அந்த கடிதத்தில் ராம்குமார் தெரிவித்திருப்பதாவது,

“சுவாதி என்ற பெண்ணை யாரென்றே எனக்கு தெரியாது. நான் சுவாதியை ஒரு தலையாக காதலித்தேன் என்று கூறுவதில் உண்மை இல்லை. இந்த விஷயத்தில் என்னை எதற்காக கைது செய்தனர் என்பது எனக்கு தெரியாது, ஆனால் இந்த விவகாரத்தில் பெரிய தலைகள் சம்பந்தப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் யாரையும் எனக்கு முன்னதாக தெரியாது, சுவாதியை நான் பின் தொடர்ந்து செல்லவில்லை, இந்த வழக்கில் சாட்சியமாக இருக்கும் பிலாலையும் எனக்கு தெரியாது.”

“உண்மையான குற்றவாளியை காப்பாற்றவே என்னை குற்றவாளியாக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். மேலும் என்னை கைது செய்ய வந்தபோது போலீசாரே எனது கழுத்தை அறுத்தனர். இந்த கொலையின் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க வேண்டும்.”

என பல்வேறு பரபரப்பு தகவல்களை ராம்குமார் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார்.

swaaaaa

swaat

Share This:
Loading...

Related Posts

Loading...