கடலிற்கு குளிக்கச்சென்று நீரில் மூழ்கிப் பலியான பிள்ளைகளை..!! சோகம் தாங்க முடியாது தூக்கில் தொங்கிய பெற்றோர் – மட்டக்களப்பில் சோகம்…!

Share this post:

pal

மட்டக்களப்பு, பாசிக்குடா கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த நான்கு பேர் நீரில் மூழ்கியதில் இருவர் காப்பாற்றப்பட்டுள்ளதுடன், ஒரே கும்பத்தை சேர்ந்த இருவர் காணாமல் போனது ( இதுவரை அவர்களது சடலம் கண்டெடுக்கப்படவில்லை) நேற்று அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்திய நிலையில் துயரம் தாங்காமல் அவர்களின் பெற்றோர் இன்று தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று மாலை 04.00 மணியளவில்கல்குடா கடற்கரையில் குளிப்பதற்காக ஐந்து இளைஞர்கள் சென்றுள்ளனர்.

இவர்களில் ஒருவரைத் தவிர மற்றய நான்கு பேரும் கடலில் குளித்துக் கொண்டு இருக்கும் போது நீர் அடித்துக் கொண்டு செல்வதை அவதானித்த கரையில் இருந்த இளைஞன் கூச்சலிட்டுள்ளார்.

இதனையடுத்து, மீனவர்களின் உதவியுடன் இரண்டு இளைஞர்கள் காப்பாற்றப்பட்டு வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்றைய இருவரும் இதுவரை மீட்கப்படவில்லை.

கல்குடா பட்டியடிச்சேனை பகுதியைில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.சதிஸ்குமார் (வயது – 20), எஸ். சுரேஸ்குமார் (வயது – 17) என்ற அண்ணனும் தம்பியுமே இவ்வாறு நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையிலேயே இதனை கேள்விப்பட்டு துயரம் தாங்காமல் அவர்களின் பெற்றோர் இன்று வீட்டில் அருகில் உள்ள மரமொன்றில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பட்டியடிச்சேனை கிராமத்தை சேர்ந்த சண்முகம்(54) மற்றும் அவரது மனைவி திருமதி யோகேஸ்வரி சண்முகம்(45) ஆகியோர்களே ஆவர்.

Share This:
Loading...

Related Posts

Loading...