12 வயது சிறுமியை காதல் வலையில் வீழ்த்தி வனப்பகுதியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஒருவர் கைது..!

Share this post:

sss

12 வயதுடைய சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர் ஒருவரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர் குறித்த சிறுமியின் வீட்டில் கூலிக்கு வேலை செய்துள்ள நிலையில் , குறித்த பெண் அவருடன் காதல் வயப்பட்டுள்ளார்.

இந்நிலையில் , கடந்த தினத்தன்று குறித்த சிறுமியின் வீட்டிற்கு வருகை தந்த சந்தேகநபர், அச்சிறுமியின் கைப்பேசியில் காணப்பட்ட குறுந்தகவல் ஒன்றின் காரணமாக சிறுமியுடன் தகராறினை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

இதன் காரணமாக குறித்த சிறுமி வீட்டை விட்டு வௌியேறியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

பின்னர் குறித்த சந்தேகநபர் அவரை ஏமாற்றி பாதுகாப்பு தருவதாக தெரிவித்து அவரை அடர்ந்த வனப்பகுதிக்கு அழைத்து சென்று இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக காவற்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை மொரவக நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியுள்ள நிலையில் , சம்பவம் தொடர்பில் பிடபெத்தர காவற்துறையினர் விசாரணைகனை முன்னெடுத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...