தொடர் இருளில் மூழ்கப்போகும் இலங்கை…!

Share this post:

power

சம்பூர் திட்டத்தை அரசாங்கம் கைவிட்டதால் நாட்டின் மின்சாரத் துறையில் பாரிய நெருக்கடி நிலைமை ஏற்படக்கூடுமென இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

திருகோணமலை சம்பூர் அனல் மின்நிலையத்தினை நிறுத்த கோரி சம்பூர் மக்கள் தொடர்ந்தும் பாரிய போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார்கள்.

இந்த நிலையில் மக்களின் கோரிக்கைகளுக்கு அமைய குறித்த திட்டத்தை அரசாங்கம் நிறுத்துவதற்கு தீர்மானித்துள்ளது. மக்களின் இந்த வேண்டுகோளை ஏற்றுக் கொண்டதால் இலங்கை மின்சாரசபைக்கு பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சம்பூர் அனல் மின் நிலைய திட்டத்தை கைவிட்டமைக்கு பின்ணணியில் பல்வேறு காரணங்கள் உள்ளது.

ஆனால் குறித்த பிரச்சினை அனைத்தையும் ஆராய்ந்த பின்னரே இந்த திட்டம் கைவிடப்பட்டுள்ளது என மின் சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி வளத்துறை அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்திருந்தார்.

இதனால் நாட்டுக்கு கிடைக்கவிருந்த 500 மெகாவோல்ட் மின்சாரம் கிடைக்காமல் போகுமேன சுட்டிக்காட்டிய மின்சார சபை, இந்தத் திட்டத்திற்கு அரசு மாற்று வழிமுறைகளை இதுவரை முன்னெடுக்காமல் உள்ளது.

இந்த நிலையில் பிரதமரினால் குழுவொன்று நியமிக்கபட்டு சம்பூரை தவிர்ந்த ஏனைய இடங்களில் இந்த திட்டத்தினை அமைப்பதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

ஆனால் இந்த சம்பூர் அனல் மின் நிலையம் வேறு இடங்களில் அமைத்தாலும் கூட அதிகளவில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான். இதனால் இந்த அனல் மின் நிலையத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் முழு நாட்டிலும் தடை செய்யப்பட வேண்டும்.

மின் உற்பத்திக்கு அனல்மின் நிலையத்தை தவிற வேறு வழிமுறைகளை அரசு கையாள வேண்டும் என்பதே மக்களது ஏகோபித்த கோரிக்கையாகும்.

இவ்வாறு புது திட்டங்களை நாட்டில் அறிமுகம் செய்வதற்கு காலதாமதம் ஏற்படும் என்பது சாதாரணமான ஒன்று. ஆனால் தாமதமாகும் காலப்பகுதி நீடித்து கொண்டே போகுமிடத்து நாடும் பாரிய இருளை நோக்கித் தள்ளப்படும் என்பது மறுக்கமுடியாத ஒன்று.

Share This:
Loading...

Related Posts

Loading...