ராம்குமாருக்கு நடந்தது என்ன..? கொலையா..? தற்கொலையா..? பொலிஸார் என் மகனை கொலை செய்து விட்டனர் – ராம்குமாரின் தந்தை குற்றச்சாட்டு…!

Share this post:

ssss

புழல் சிறையில் என் மகனை கொலை செய்து விட்டனர் என்று சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு தற்கொலை செய்து கொண்ட ராம்குமாரின் தந்தை பரமசிவம் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சூளைமேட்டையைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சுவாதி, ஜூன் 24-இல் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ராம்குமாரை ஜூலை 1ம் தேதி போலீசார் கைதுசெய்து சென்னையில் புழல் சிறையில் அடைத்தனர்.

ராம்குமாரை போலீசார் கைது செய்யும் போதே அவர் கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயற்சி செய்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து அவர் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்பட்டார்.

ராம்குமார் கொலையாளி இல்லை என்று கூறப்பட்டது. இதனையடுத்து ராம்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர். அவரது கையெழுத்து பரிசோதனை செய்யவும் போலீசார் மனு தாக்கல் செய்தனர். ஆனால் தான் சுவாதியைக் கொலை செய்யவில்லை என்றும், கையெழுத்து பரிசோதனைக்கு உடன்படமாட்டேன் என்றும் அவர் நீதிமன்றத்தில் எழுதிக்கொடுத்தார்.

ராம்குமார் மீது அடுத்தவாரம் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய இருந்த நிலையில் இன்று புழல் சிறையில் மின்சாரம் பாய்ந்துகொண்டிருந்த கம்பியை கடித்து ராம்குமார் தற்கொலைக்கு முயன்றாதாக தகவல் வெளியானது.

இதையடுத்து ராம்குமார் உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டார். மருத்துவமனைக்கு வரும் வழியில் அவர் உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியானது.

இது குறித்து ராம்குமாரின் தந்தைக்கு தகவல் அளிக்கப்பட்டது. டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த ராம்குமாரின் தந்தை, தனது மகன் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அவரை போலீசார்தான் சிறையில் கொன்று விட்டனர் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

சிறையில் இருந்து தனக்கு வந்த தகவலில் உடல்நிலை சரியில்லாமல் தனது மகன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவே கூறினர் என்றும் பரமசிவம் தெரிவித்தார்.

ராம்குமாரின் பெற்றோரிடம் கையெழுத்து பெற்ற பின்னரே பிரேத பரிசோதனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. ராம்குமாருடன் சிறையில் இருந்தவர்கள் யார் யார் என்றும்,

Share This:
Loading...

Related Posts

Loading...