நீரில் மூழ்கிய பெண்ணைக் காப்பாற்ற முயன்ற 5 பேர் பரிதாபமாகப் நீரில் மூழ்கிப்பலி !

Share this post:

de

அணை நீரில் மூழ்கிய 5 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தெலுங்கானா மாநிலம் வாராங்கல் மாவட்டத்தில் உள்ள வாக்தேவி பொறியியல் கல்லூரியில் மூன்றாமாண்டு படிக்கும் மாணவ-மாணவிகள் சிலர் நேற்று காலை தர்மசாகர் நீர்த்தேக்கத்திற்கு வந்தனர்.

அணையில் இறங்கி நீந்திக்கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்ற மாணவி ஒருவர் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துள்ளார்.

அவரைக் காப்பாற்ற மற்ற மாணவர்கள் அங்கு சென்றபோது அவர்களும் மூழ்கியுள்ளனர். அங்கிருந்த பொதுமக்கள் அவர்களுக்கு உதவி செய்தனர். ஆனால், மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. இந்த விபத்தில் 5 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 2 பேர் மாணவிகள் ஆவர்.

தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ஸ்ரவ்யா என்ற மாணவியின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்களின் உடல்களை தேடும் பணி நடைபெறுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...