மனைவியின் மூக்கை வெட்டிய கணவன் – ஏன் தெரியுமா..?

Share this post:

man

வரதட்சணை கொடுக்காத காரணத்தினால் மனைவியின் மூக்கை கணவர் வெட்டிய அதிர்ச்சி சம்பவம் நடைபெற்று உள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் ஷாக்ஜாகான்பூரை சேர்ந்தவர் கம்லேஷ் ரத்தோர்(வயது 25). அவருடைய கணவர் சஞ்ஜீவ் ரத்தோர் (வயது 27) திருமணம் ஆனதில் இருந்து பெற்றோரிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் வரதட்சணையாக வாங்கிவர தொந்தரவு கொடுத்து உள்ளார்.

இவருக்கும் திருமணம் ஆனதில் இருந்து இந்த கொடுமை அரங்கேறிஉள்ளது. கம்லேஷ் பேசுகையில், “என்னுடைய கணவர் வரதட்சணை வாங்கி வர கூறி தினம் தொல்லை கொடுப்பார். அவர் தொடர்ச்சியாக ரூ. 50 ஆயிரம் வரதட்சணையாக கேட்டு வந்தார்.

என்னுடைய தந்தை மிகவும் கஷ்டத்தில் உள்ளார், அவரால் இவ்வளவு தொகை கொடுக்க முடியாது என்று நான் கூறிவந்தேன், இந்த சண்டையில் என்னுடைய மூக்கை வெட்டிவிட்டார் என்று கூறிஉள்ளார்.

என்னை பல ஆண்டுகளாக அடித்து வந்தார். என்னை பெல்ட், செருப்பு கம்பு என கையில் கிடைப்பதை கொண்டு தாக்கிவந்தார். பாலியல் வேலை பார்க்குமாறு என்னை கொடுமை படுத்தினார், என்னை விற்றுவிடுவேன் என்று மிரட்டினார். எப்போதும் மது குடிப்பார்.

8 வருட திருமண வாழ்க்கையில் என்னை கொடுமைதான் படுத்தினார். கடந்த 14-ம் தேதி சமையல் செய்த போது வரதட்சணை கேட்டு தொல்லை கொடுத்தார். அப்போது கத்தியை எடுத்து என் மூக்கை வெட்டிவிட்டார்.

இதற்கு என்னுடைய மாமியாரும் உடந்தையாக இருந்தார். அவர்கள் என்னை மிகவும் இறுக்கமாக பிடித்துக் கொண்டனர், என்னால் அங்கிருந்து வெளியேற முடியவில்லை என்று கம்லேஷ் கூறிஉள்ளார். அவருடைய 6 வயது பெண் குழந்தையும் அதனை உறுதிசெய்து உள்ளது.

இதனையடுத்து கம்லேசை அவருடைய பெற்றோர்கள் வெட்டப்பட்ட மூக்குடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளனர், ஆனால் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மூக்கை ஒட்ட வைக்க முடியாது என்று கூறிவிட்டனர். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கம்லேஷின் மாமனார், மாமியார், கணவர், நாத்தனார் என அனைவரும் தலைமறைவு ஆகிவிட்டனர்.

அவர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர். அவர்கள் கைது செய்யப்படும் வரையில் எதையும் கூற முடியாது என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு விட்டது.

Share This:
Loading...

Related Posts

Loading...