இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசி பலன்கள் 18. 09. 2016

Share this post:

rasipalan

மேஷம்

விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர்களுடன் மனத்தாங்கல் வரும். வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ரிஷபம்

உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

மிதுனம்

கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 7அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

கடகம்

கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

சிம்மம்

சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒய்வெடுக்க முடியாமல் உழைக்க வேண்டி வரும். கணவன்-மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். யாரையும் நம்பி உறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

கன்னி

கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஆதரவுக் கிட்டும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

துலாம்

கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

விருச்சிகம்

மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

தனுசு

நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். மனதிற்கு இதமான செய்தி வரும். பழைய கடனைத் தீர்க்க புது வழி பிறக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில்நீலம், பிங்க்

மகரம்

கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பழைய சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ்பச்சை, ரோஸ்

கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். தடைப்பட்ட வேலைகள் விரைந்து முடியும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: இளஞ்சிவப்பு, க்ரீம்வெள்ளை

மீனம்

ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். மற்றவர்கள் விஷயத்தில் அநாவசியமாக தலையிட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: அடர்சிவப்பு, கிரே

Share This:
Loading...

Related Posts

Loading...