பொது இடங்களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான இந்திய நடிகைகள்!

Share this post:

po

பிரபலமாக வாழ்வது மிக எளிதான காரியம் அல்ல. சில மிக சிறிய விஷயங்களை கூட அவர்களால் செய்ய முடியாது. பொது இடங்கள்,அவர்களுக்கு பிடித்த இடங்கள் என எங்கும் எளிதாக சென்று வர முடியாது. ஏன், அவர்களது கருத்தை ஒரு இடத்தில் பதிவு செய்தால் கூட அது தலைப்பு செய்தி ஆகிவிடும், எதிர்ப்புகள் கிளம்பிவிடும்.

அதிலும், நடிகைகள் மிகவும் பார்த்து, பார்த்து செல்ல வேண்டும், ரசிகன் என்ற பெயர் எப்படியாவது தொட்டு பார்த்துவிட வேண்டும் என்ற கண்ணோட்டத்தில் இருப்பவர்களும் இருக்க அதான் செய்கிறார்கள். அப்படி சில தருணத்தில் பொது இடங்களில் கூட சில நடிகைகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளனர்…

கவுவாஹர் கான்!
கவுவாஹர் கான் ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றின் அரங்கில் குட்டை உடைகளை அணிந்து நின்றுக் கொண்டிருந்த போது. அதை காரணம் காட்டி ஒரு ஆண், கண்ணத்தில் அடித்தார், என சமீபத்தில் கூறினார்.

கத்ரீனா கைப்!
ஆசியாவின் பேரழகி என பெயர்பெற்ற கத்ரீனாவை கொல்கத்தாவில் 2005-ம் ஆண்டு துர்கா பூஜைக்கு சென்று வரும் போது கும்பலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்.

சோனாக்ஷி சின்ஹா!
கடந்த 2010-ம் ஆண்டு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது, கும்பலாக வந்த ஆண்கள் சிலர் அவரை தவறாக தீண்டியாது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இஷா தியோல்!
2005-ம் ஆண்டு புனேவில் இஷா தியோல்-ஐ ஒரு நபர் அந்தரங்க இடத்தில் தீண்ட முயற்சித்தார், உடனே அந்த நபரை ஓங்கி அடித்துவிட்டார் இஷா தியோல்.

ஷெர்லின் சோப்ரா!

இவர் பணியாற்றிக் கொண்டிருந்த செட்டிலேயே இவரை ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...