யாழ்ப்பாணம் மட்டக்களப்பிற்கு சேவையில் ஈடுபடும் பஸ்ஸின் திருகுதாளம் அம்பலம்????

Share this post:

batti

மட்டக்களப்பில் தாழங்குடாகல்வியல்கல்லூரி ,கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் நன்மை கருதி கடந்த மாதம் மட்டக்களப்பிலிருந்து காங்கேசன்துறை வரை போக்குவரத்து சேவை கிழக்குமாகாணசபையினால் மட்டக்களப்பு டிப்போவிற்குரிய அதிகாரம் கொடுக்கப்பட்டது.

ஆனால் இதன் முழுசேவையை பொதுமக்களினால் பெறமுடியவில்லை என விசனம் தெரிவித்தனர்.

அதிகமான பயணிகள் வவுனியாவரை மட்டக்களப்பிலிருந்து செல்லுகின்றனர் ஆனால் இவர்களுக்கும் காங்கேசன் துறை வரை செல்லும் முழுக்கட்டணம் இவர்களால் அறவிடப்படுகின்றது.

இதனால் வவுனியாவரை செல்லும் மக்கள் இன்னும் 200ரூபாய் மேலதிகமாக செலுத்தப்படவேண்டிய துர்ப்பாக்கியநிலை காணப்படுகின்றது.
எதிர்த்து கேள்வி கேட்டால் பஸ் டிக்கட் கொடுக்க மாட்டோம் என மிரட்டப்படுகின்றனர்.

இது பாரிய மனித உரிமை மீறலாகும் இதை சம்மந்தப்பட்ட பலருக்கு பொதுமக்கள் அறிவித்து இன்னும் எதுவித தீர்வு எட்டப்படவுமில்லை எனவே சம்மந்த கிழக்கு மாகண போக்குவரத்து சபை கவனிக்குமா?

Share This:
Loading...

Related Posts

Loading...