தொலைபேசி கட்டணங்கள், இணையங்களின் வரி அதிகரிப்பு – இளைஞர்கள் பெரும் பாதிப்பு…!

Share this post:

sdsa

தொலைபேசி கட்டணங்கள் மற்றும் இணையங்களின் வரி அதிகரிப்பினால் இளையோர் மிகுந்த பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

சோசலிச இளைஞர் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது. தற்போது தொலைபேசி, இணையங்கள் என்பன பொதுமக்களின் அத்தியாவசிய தேவையாகிவிட்டதாக அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, இவ்வாறான நிலையில் இவற்றின் வரிகளை 50 வீதத்திற்கு அதிமாக அதிகரிப்பதானது இந்நாட்டின் இளையோர் மற்றும் ஏனைய பொதுமக்களுக்கும் இழைக்கப்படும் அநீதி என்றும் அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் நல்லாட்சியானது இளைஞர்களும்,பொதுமக்களும் பாதிக்கப்படும் வகைளில் முன்வைக்கப்பட்டுள்ள வரி அதிகரிப்பு யோசனையை உடனடியாக நீக்குமாறு கோரி சோசலிச இளைஞர் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...