ஆயுர்வேத நிலையத்தில் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி முற்றுகை – 4 பேர் கைது.!

Share this post:

trb

ஆயுர்வேத மசாஜ் நிலையம் என்ற போர்வையில் கல்கிஸ்ஸ பகுதியில் மிகவும் சூட்சுமமாக இயங்கி வந்த விபசார விடுதியொன்றினை சுற்றிவளைத்த பொலிஸார் 4 பெண்களை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இவர்கள் 30, 36, 38 மற்றும் 44 வயதானவர்கள் எனவும் இவர்கள் இங்கிரிய, பல்லெவெல, கந்தளை மற்றும் நேகம்பளை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

நேற்று இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்போது அந்த விடுதியின் நடத்துனரான கல்கிஸ்ஸ பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரையும் விபசாரத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் 3 பெண்களையுமே பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அவர்கள் இன்று கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பில் கல்கிஸ்ஸ பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...