பளை விபத்தில் இறந்தவர்களின் பெயர் விபரங்கள் வெளியாகியது..! விபரம் இணைப்பு…

Share this post:

acc

நேற்று (15.09.2016) காலை 6 மணியளவில் புதுக்காட்டுச்சந்திக்கும் இயக்கச்சிக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து்ம் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனமும் விபத்துக்குள்ளாகி ஹயஸ் வாகனத்தில் வந்த 5 பேர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்ததாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மதுகம நோக்கி பயணித்த பஸ்ஸிடன் கொழும்பில் இருந்து வந்த ஹயஸ் வாகனம் வழித்தடம் மாறிச் சென்று பஸ்ஸிடன் மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துச் சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த4 பேர் உயிரிழந்துள்ளனர். 7 பேர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

படுகாயமடைந்த 7 பேரில் 3 பேரின் நிலமை கவலைக்கிடமாக இருப்பதனால், மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

விபத்துச் சம்பவம் குறித்து பளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வவுனியாவில் இடம்பெற்ற மரண வீடொன்றில் பங்கேற்றுவிட்டு யாழ்ப்பாணம் திரும்பிக் கொண்டிருந்தவர்களே இந்த விபத்தில் சிக்கியுள்ளார்கள்.

நெல்லியடியை வசிப்பிடமாக் கொண்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த எஸ்.பசுபதி (வயது 78), ப.பொன்னம்மா (வயது 75), ப.நந்தமூர்த்தி (வயது 43) ஆகியோரும், அவர்களின் உறவுக்கார பெண்ணான ஒருவரும் பலியாகியுள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...