என்னை உயிரோடு எரிக்க முயன்றார் தந்தை.. இந்தியாவிற்க்காக விளையாடி பரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் பெற்ற தமிழ் வீரனின் சோக கதை …

Share this post:

dfd

இந்தியாவுக்காக பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி இந்தியா முழுவதும் அவர் தொடர்பாக மிக பெரிய அனுதாப அலையை உருவாக்கி உள்ளது என் தாயாரை சித்ரவதை செய்து என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்து எங்களை கைவிட்டுப் போன தந்தை தங்கவேலு இப்போது உரிமை கோருவதை சகித்துக் கொள்ள முடியவில்லை…

என்னை மாரியப்பன் என்றே அழையுங்கள்.. மாரியப்பன் தங்கவேலு என அழைப்பதை விரும்பவில்லை என்று பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் கனத்த வேதனையுடன் கூறியுள்ளார்.

ரியோவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்றவர் தமிழக வீரர் மாரியப்பன்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து இந்த சரித்திரத்தைப் படைத்திருக்கிறார் தங்கமகன் மாரியப்பன். அவருக்கு பரிசுத் தொகைகள் குவிந்து வரும் நிலையில் இத்தனை காலம் கண்டுகொள்ளாத உறவினர்கள் ‘உரிமை’ கோரி வருவது மாரியப்பனை வெகுவாக பாதிக்க வைத்துள்ளது.நான்தான் உலகிலேயெ சந்தோஷமான மனிதன் அல்ல.. ரியோவில் இருக்கும் ஒவ்வொரு இரவிலும் நான் தூக்கமின்றி தவிக்கிறேன்.

ஏனென்றால் என் தாயார் என்னிடம் தொலைபேசியில் சொல்லும் தகவல்கள் அப்படியானவை… நான் இப்போது வென்ற வெற்றிக்கு தொடர்பே இல்லாதவர்கள் எல்லாம் தாயாரை நெருக்கடிக்குள்ளாக்குகிறார்கள்
இதனால் என் தாயார் மிகவும் அச்சத்துடன் இருக்கிறார்.என்னுடைய இந்த வெற்றிக்கு ஒரே காரணம் பயிற்சியாளர் சத்யநாராயணசார்தான்.

எனது உறவினர்கள் என்னையும் எனது தாயாரையும் மதித்ததில்லை. ஆனால் இப்போது எனது தாயாரை நெருக்கிக் கொண்டிருப்பதாக என்னிடம் அவர் போனில் கூறி அழுகிறார்.

எங்களை பரிதவிக்க விட்டு சென்ற தந்தை தங்கவேலு இப்போது குடும்பத்தினரிடம் உரிமை கோருவதாக எனது தாயார் சொல்கிறார். எனது தாயை கருணையே இல்லாமல் துன்புறுத்தியவர் அவர்.

எந்த காரணத்தைக் கொண்டும் அவரை நான் பார்க்க விரும்பவில்லை. ஒரு முறை என்னை உயிரோடு எரித்து கொல்ல முயற்சித்தார்.

எனது தாயையும் அவரது நான்கு குழந்தைகளையும் தவிக்க விட்டு சென்றவருக்கு எனது மனதில் என்றுமே இடம் கிடையாது. நான் மாரியப்பன#3021; தங்கவேலு என்று அழைப்பதைக் கூட விரும்பவில்லை. நான் வெறும் மாரியப்பன் மட்டுமே!

Share This:
Loading...

Related Posts

Loading...