யாழில் 400ரூபா முதலிட்டு 65,000 ஒரே நாளில் சம்பாதித்த இளைஞன்…!

Share this post:

gfg

கடந்தவாரம் கொடிகாமம் முருகமூர்த்தி ஆலயத்தில் வருடாந்த அலங்கார உற்சவ திருவிழா நடைபெற்றது .இதன் கடைசி நாளான 10 ம் நாள் சுவாமி ஊர்வலம் வருவது வழக்கம் .

அப்போது அந்த ஆலய சூழலுக்கு வந்த இளைஞன் ஒருவன் தான் மட்டக்களப்பு காரைதீவு எனவும் பெயர் ரவி எனவும் கூறியுள்ளார் இந்த ஆலயத்திற்கு வைரக்கல் ஒன்றை கொடுக்கவிரும்புவதாக கூறியே ஆலயத்தினுள் இருந்தவர்களிடம் அறிமுகமாகியுள்ளர் .

வெள்ளையாய் இருப்பவன் பொய் சொல்ல மாட் டான் என நினைத்த மக்கள் அதை வாங்கி கோவிலில் வைத்தனர் .
தனது நண்பன் இந்தியவில் கொண்டு வந்ததாகவும் அதை எதாவது ஒரு ஆலயத்துக்கு கொடுக்க சொன்னதாகவும் கூறியுள்ளார் .

இதனால் அந்த பகுதி மக்கள் அவரை அதிக மரியாதையோடு நடத்தி வந்தனர் .

இறுதியாக அந்த இளைஞன் சுவாமி ஊர்வலத்தில் சேர்ந்த சுமார் 15,000 வரையிலான பணத்தையும் இருவரின் சுமார் 50.000 மதிக்கத்தக்க தொலைபேசியையும் நூதனமாக யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் ஏமாற்றி எடுத்து சென்றுள்ளார் .

இதில் சிரிப்பு என்னவென்றால் அவர் களவெடுத்த பொருள்களோடு வந்த போது அதை அறியாத அந்தக்கிராமத்தில் ஆட்டோ ஓடும் ஒரு இளைஞன் அவர் ஊருக்கு செய்த நன்மைகளையும் அவரது பெருந்தன்மையையும் மதித்து அவரை தனது ஆட்டோவில் ஏற்றி சென்று குறிப்பிட்ட இடத்தில் இறங்கியிருக்கிறார் .

பின்னர் விசாரித்து பார்த்தபோது அந்த கல் அசல் வைரம் கிடையாது என்றும் அதன் பெறுமதி 400 ரூபாதான் என்றும் தெரிய வந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...