உடல் எடையை தொடர்ச்சியாய் பக்கவிளைவுகளின்றி குறைக்க எளிய ஒரே வழி இது தான்…!

Share this post:

edai

தாமரை பூபோலவே அதன் தண்டுகளும் பல்வேறு மருத்துவ குணங்கள்நிறைந்து. தாமரை கிழங்குகள் என்று அறியப்படும் இதில் உடலுக்கு தேவையான கலோரிகள் அதிக அளவில் உள்ளன.

உதாரணமாக 100 கிராம் தாமரை கிழங்கில் 74 கலோரிகள் அடங்கியுள்ளது.

மருத்துவ பயன்கள் :

ஏராளமான சத்துக்கள் , தனிமங்கள் மற்றும் விட்டமின்களான பி6, சி தாமரை கிழங்கில் நிறைந்துள்ளன.
மனிதர்களின் தினசரி உணவு பட்டியலில் கட்டாயம் இருக்க வேண்டிய விட்டமின் சி இந்த தாமரை கிழங்கில் மிகுதியாக உள்ளது.

இதனுடன் உடலுக்கு தேவையான இரும்பு
சத்து, கந்தகச்சத்து போன்றவைகளும் இதில் அடங்கியுள்ளன.
பொதுவாக தாமரையை போலவே தாமரை கிழங்குகளும் கசப்பாக இருப்பதால், இதனை வேகவைத்து சூப்புகளில் சேர்த்து குடிக்கலாம்.

சில நாடுகளில் இதனை துண்டு துண்டாக வெட்டி அதனுடன் மிளகு, மற்றும் காரம் போன்றவற்றை சேர்த்து நொறுக்கு தீனியாக உண்கின்றனர்.

மேலும் தாமரை தண்டுகளில் செய்யப்படும் வடை சுவையாகவும் , மருத்துவ தேவைகளை சமாளிப்பதாகவும் உள்ளது.

தாமரைக் கிழங்கு துண்டுகளுடன் வெள்ளைப் பூண்டு இஞ்சி மிளகாய் ஆகியவற்றைக் கலந்து எண்ணெயில் பொரித்தும் சாப்பிடலாம்.

தாமரை தண்டுகளை சாப்பிடுவதால் வயிற்றிலும் ரத்தத்திலும் உள்ள வெப்பத்தை குறைக்கலாம் என்று சீன மருத்துவ முறைகள் கூறுகின்றன.

குறிப்பாக பெண்கள் தாமரைத் தண்டின் கணுக்களை சாப்பிடுவது நல்லது . ஏனென்றால் கருப்பையில் இருந்து ரத்தம் கொட்டுவதை இது கட்டுப்படுத்துகின்றது.

மேலும் சிறு நீரிலும் மலத்திலும் ரத்தம் கலந்து வருவதும் ரத்த வாந்தியும் நிறுத்துவதற்கு தாமரைக் தண்டின் கணுக்களை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிடலாம்.

Share This:
Loading...

Recent Posts

Loading...