மனைவி சடலத்துடன் அம்புலன்சில் சுற்றிய கணவர்: காரணம் என்ன?

Share this post:

amp

டெல்லியில் மர்ம காய்ச்சலால் இறந்த மனைவியின் சடலத்தை வாடகை வீட்டில் கொண்டுவர அனுமதி மறுத்ததால் ஆம்புலன்சில் வைத்து சுற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் கர்கர்டோமோ என்ற கிராமத்தை சேர்ந்தவர் சோட்டே லால். இவர் அப்பகுதியில் ஒரு வாடகை வீட்டில் வசித்துக் கொண்டு சிறு பெட்டிக் கடை ஒன்று நடத்தி வருகிறார்.

இந்நிலையில், சோட்டே லால் மனைவி அஞ்சு என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சோட்டே லால் மனைவி இறந்து விடவே சடலத்தை ஆம்புலன்ஸ் மூலம் வீட்டிற்கு கொண்டுவந்துள்ளார்.

ஆனால், வீட்டின் உரிமையாளரோ சோட்டே லால் மனைவியின் சடலத்தை வீட்டிற்குள் கொண்டு செல்லக் கூடாது என கூறியதால் செய்வதறியாது மனைவியின் சடலத்தை தெருவில் வைத்து வேதனையில் உடகார்ந்திருந்துள்ளார்.

இந்நிலையில், அக்கம்பக்கத்தினரும் தெருவில் சடலத்தை வைக்கக்கூடாது என தகராறு செய்துள்ளனர். மிகவும் மனம் நொந்து போயிருந்த சோட்டே லால்க்கு அவர் குடியிருந்த வீட்டின் உரிமையாளரே பண உதவி அளித்து குளிர்சாதன வசதியுடன் கூடிய ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு இரவு முழுவதும் தனது மனைவியின் சடலத்துடன் டெல்லியை சுற்றியுள்ளார்.

இதையடுத்து, ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிசார் விசாரித்ததில், சோட்டே லாலின் பரிதாப நிலை தெரியவந்தது. இதனையடுத்து பொலிஸ் உயர் அதிகாரி உதவியால், அந்த பகுதியில் இருந்த வியாபாரியின் வீட்டில், அஞ்சுவின் உடலை வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, நேற்று காலை, அஞ்சுவின் உடல் தகனம் செய்யப்பட்டது.

மேலும், இது குறித்து சோட்டே லால் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளர் கூறியதாவது, சோட்டே லால், என் வீட்டின் மூன்றாவது மாடியில் உள்ள சிறிய அறையில் தங்கியுள்ளார். அஞ்சுவின் உடல் ஏற்கனவே மோசமான நிலையில் இருந்தது. அதனால் காலை வரை, காற்றோட்டம் இல்லாத சிறிய அறையில் உடலை வைத்திருந்தால் அது அதிகமாக பாதிக்கப்படும்.

மேலும், அக்கம் பக்கத்தினருக்கும் நோய் பரவும் அபாயம் ஏற்படும். எனவே, என் சொந்த செலவில் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தேன் என கூறியுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...