பெண்ணொருவர் இளைஞன் மீது பாலியல் முறைப்பாடு ஆனால் விசாரணையில் வௌியான திடுக்கிடும் தகவல்கள்…!

Share this post:

il

இளைஞர் ஒருவர் தன்னை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்த யுவதி தொடர்பில் முந்தலம் காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த பெண் இதற்கு முதல் பல சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளமை காவற்துறை விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

16 வயதுடைய குறித்த யுவதி , இளைஞர் ஒருவர் தன்னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்றார் என காவற்துறையில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் காவற்துறையால் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

குறித்த யுவதியிடம் மேற்கொண்ட தீவிர விசாரணையின் பின்னர், அவரின் தாத்தாவால் 3 சந்தர்ப்பங்களில் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் , அவர் மருத்துவ பரிசோதனைக்காக புத்தளம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முந்தலம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...