எச்சில் துப்பிய நபர் பரிதாபமாக பலியான அதிர்ச்சி சம்பவம்..! என்ன நடந்துச்சு தெரியுமா..?

Share this post:

ech

வாயில் இருந்த குட்காவை உயர்அழுத்த மின்கம்பி மீது துப்பியபோது மின்சாரம் பாய்ந்ததில் வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மகாராஷ்டிராவின் மலேகான் பகுதியை சேர்ந்தவர் முகமது யாசின். இவர் நேற்று முன்தினம் தனது சகோதரரை பார்ப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றிருந்தார்.

முதல் மாடியில் வசித்து வரும் முகமதுவின் சகோதரர் வீட்டில் ஜன்னல் அருகே உயர்அழுத்த மின்கம்பி செல்கிறது. முகமது வாயில் குட்கா பாக்கை மென்று கொண்டு இருந்ததாக தெரிகிறது.

பின்னர் அதனை வீட்டில் இருந்த ஜன்னல் வழியாக வெளியே உமிழ்ந்துள்ளார்.

அவரது வாயில் இருந்து எச்சில் உமிழ்ந்துகொண்டு இருந்தபோதே அது உயர்அழுத்த மின்கம்பியின் மீது விழுந்துள்ளது.

அந்த கண்ணிமைக்கும் நேரத்தில் எச்சில் வழியாக ஏற்பட்ட மின்கசிவு காரணமாக முகமதுவை மின்சாரம் தாக்கியது.

அலறித்துடித்த அவர் கீழே விழுந்தார். உடனடியாக அவரை மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

முகமது வாயில் இருந்த எச்சில், மின்கம்பியை தொடும்போது, கம்பிக்கும், அவரது வாய்க்கும் இணைப்பு ஏற்பட்டு நொடி நேரத்தில் மின்சாரம் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...