முதலிரவை படம் பிடிக்க முயன்ற கணவருக்கு மனைவி கொடுத்த அதிர்ச்சி தண்டனை!

Share this post:

ka

பெங்களூருவில், முதலிரவை செல்போனில் படம் பிடிக்க முயன்றதால் கணவனை பிரிய மனைவி முடிவு செய்துள்ளார்.

இதற்கிடையே அந்த கணவன்-மனைவிக்கு ‘வனிதா சகாயவாணி‘ என்ற அமைப்பு அறிவுரை வழங்கி சேர்த்து வைக்க முயற்சித்து வருகிறது.

பெங்களூரு எலகங்காவில் வசித்து வருபவர் குமார் (வயது 35). தொழில்அதிபர். இவருக்கும் கம்ப்யூட்டர் நிறுவன ஊழியரான ராமநகரை சேர்ந்த மீனா (26, இருவரின் பெயர்களும் மாற்றப்பட்டுள்ளது) என்பவருக்கும் கடந்த மே மாதம் 9-ந் திகதி திருமணம் நடந்தது. இந்த திருமணம் இரு குடும்பத்தினரின் முன்னிலையில் நடந்தது. இவர்களின் முதலிரவு எலகங்காவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

அதன்படி குமாரும், மீனாவும் தனியார் தங்கும் விடுதியில் இரவில் தங்கினர். அப்போது, முதலிரவை தனது செல்போனில் குமார் படம் பிடிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இதற்கு மீனா அனுமதிக்கவில்லை. இதனால், ஆத்திரமடைந்த குமார், மீனாவை அறை உள்ளே ஒரு நாள் முழுவதும் பூட்டி வைத்து சாப்பாடு வழங்காமல் இருந்துள்ளார்.

இதனால் மனம் உடைந்த மீனா அடுத்த நாளே தனது தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

மேலும், குமாரிடம் இருந்து பரஸ்பர விவாகரத்து பெற மீனா முடிவு செய்தார். இந்த நிலையில், ‘எனது மனைவியை ஒரு மாதத்திற்குள் என்னுடன் சேர்த்து வைக்காவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன்’ என மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு குமார் கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இந்த கடிதத்தை தொடர்ந்து பொலிசார் குமாரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி எச்சரிக்கை விடுத்தனர். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக குமார்-மீனா தம்பதிக்கு மாநகர பொலிஸ் கமிஷனர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் ‘வனிதா சகாயவாணி’ அமைப்பு அறிவுரை வழங்கி தம்பதியை சேர்த்து வைக்க முயற்சித்து வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...