பிறந்தநாளுக்கு அதிபர் வழங்கிய வில்லங்க பரிசு – மாணவி மருத்துவமனையில் அனுமதி..!

Share this post:

maaa

வலஸ்முல்ல தேசிய பாடசாலையில் அதிபரின் தாக்குதலை அடுத்து மாணவி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்குதலால் குறித்த மாணவியின் கைகளிலும் முதுகுப்பகுதியிலும் காயங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

தமது பிறந்தநாளை முன்னிட்டு குறித்த மாணவி சக மாணவர்களுக்கு வழங்கிய இனிப்பு பண்டங்களின் பொதி காகிதங்கள் வகுப்பில் வீசப்பட்டுள்ளன.

இதனை அடுத்து மாணவியை அதிபர் தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாக்கும் போது மாணவியின் பிறந்தநாளுக்கான பரிசு இதுவென்று அதிபர் கூறியதாகவும் கூறப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...