சுயமாக உருவாக்கிய மருந்தை சோதித்த மருத்துவருக்கு நேர்ந்த கதி..!

Share this post:

im

ஆயுர்வேத மருத்துவர் ஒருவர் சொந்தமாக உருவாக்கிய மருந்தை சோதனை செய்ததில் 9 ஆண்டுகள் கோமாவில் தள்ளப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கேரளாவின் கொச்சி மாவட்டத்தை சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் 46 வயதான பைஜு. இவர் தன்னிடம் சிகிச்சைக்கு வந்த நோயாளி ஒருவருக்கு பரிந்துரை செய்த மருந்தை சோதிக்கும் பொருட்டு தானே எடுத்துக்கொண்டுள்ளார்.

இதில் கடுமையாக பாதிப்புக்குள்ளான மருத்துவர் பைஜு நீண்ட 9 ஆண்டுகள் கோமாவில் இருந்துள்ளார். இந்த நிலையில் சிகிச்சை எதுவும் பலனளிக்காததால் இன்று அவர் உயிரிழந்துள்ளார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு மருத்துவர் பைஜு இடுக்கி மாவட்டத்தில் அரசு ஆயுர்வேத மருத்துவமனையில் பணியாற்றி வந்தபோது இவரிடம் சிகிச்சைக்காக பெண்மணி ஒருவர் வந்துள்ளார்.

அவருக்கு எலும்பியல் தொடர்பான பிரச்னைக்கு இவர் சுயமாக கண்டுபிடித்த மருந்து ஒன்றை வழங்கியதாக கூறப்படுகிறது. இதில் அந்த பெண்மணி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் உரிய சிகிச்சை பெற்று காப்பாற்றப்பட்டார்.

இதைத் தொடர்ந்து குறிப்பிட்ட மருத்துவரை அணுகி அந்த குடும்பத்தினர் நடந்தவற்றினை கூறி விளக்கம் கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த மருத்துவர் தாம் வழங்கிய மருந்தில் குறையேதும் இல்லை என நிரூபிக்கும் பொருட்டு குறிப்பிட்ட மருந்தை அவரே உட்கொண்டுள்ளார்.

இதில் கடுமையாக பாதிக்கப்பட்ட மருத்துவர் சுய நினைவு இழந்து நீண்ட 9 ஆண்டுகள் கோமாவில் இருந்துள்ளார். பல மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்றும் அவரை கோமாவில் இருந்து இறுதி வரை மீட்க முடியாமல் போனது.

இந்த நிலையில் மருத்துவர் பைஜு இன்று உயிரிழந்துள்ளார். இதனிடையே குறிப்பிட்ட பெண்மணியின் கணவர், மருத்துவர் பைஜு மீது விஷம் தந்து கொலை செய்யா முயன்றதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...