தனது காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்..! தமிழ் பெண் ஒருவருக்கு நடந்த சோகம்..!

Share this post:

ga

மருத்துவ கல்லூரி மாணவியான, தனது காதலியை நண்பனுக்கு இரையாக்கிய காதலன் உட்பட மூவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

சென்னையில் உள்ள போரூர் இராமச்சந்திரா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முடித்துவிட்டு தற்போது எம்.எஸ் மருத்துவ படிப்பை படித்து வருகிறார் செல்வி (26). (பெயர் மாற்றப்பட்டுள்ளது.) வார இறுதியை செலவழிக்க இவரும், இவரது காதலனும் நேற்று முன்தினம் மாமல்லபுரத்திற்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஐந்துரதம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளையும் நன்றாக சுற்றிப் பார்த்துள்ளனர். பின்னர், ஒத்தவாடை தெருவில் இருக்கும் ஒரு தனியார் விடுதியில் இருவரும் ஒன்றாக தங்கியுள்ளனர்.

காதலனின் நண்பரும் இவர்களுடன் வந்துள்ளார். இவர்கள் தங்கிய அறைக்கு பக்கத்தில் இருக்கும் அறையில் நண்பரைத் தங்க வைத்துள்ளார் செல்வியின் காதலன்.

இரவில், செல்வியும், அவரது காதலனும் ஒன்றாக மது அருந்தி உல்லாசமாக இருந்ததாக என்று கூறப்படுகிறது.

நேற்று அதிகாலை போதை மயக்கம் தெளிந்து எழுந்த செல்வி, ஏதோ மாறுதலை உணர்ந்துள்ளார். அறையின் கதவு திறக்கப்பட்டு இருப்பதும், காதலினனின் நண்பர் தங்களது அறையில் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று குழப்பம் அடைந்துள்ளார். அதனை தெளிவுப்படுத்திக் கொள்ள காதலனிடம் கேட்டபோது, அவரின் பதில்கள் எதுவும் நம்பக் கூடியதாக இல்லை என்பதை உணர்ந்தார் செல்வி.

அதன்பிறகே, தான் காதலனின் நண்பனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளோம் என்பது அவருக்கு கொஞ்சம் கொஞ்சமாக நியாபகம் வந்தது. அறைக்கதவு மூடாமல் இருப்பதை பார்த்தச் சந்தேகம் அடைந்த செல்வி, இதற்கு விடுதி ஊழியரும் உடந்தையாக இருப்பதை தெரிந்து கொண்டார்.

பின்னர், அங்கிருந்து புறப்பட்ட செல்வி, இது தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் செல்வியின் காதலன், அவரது நண்பர் மற்றும் விடுதியின் ஊழியர் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில், செல்வி பாலியல் பலாத்காரம் செய்யப்படும்போது, ஏதேனும் வீடியோ பதிவு செய்யப்ப்ட்டதா? என்ற கோணத்திலும் விசாரிக்கின்றனர்.

மேலும், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளாரா என்று மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. அந்த பரிசோதனையில் அவர் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

பலாத்காரம் செய்யப்பட்ட செல்வியின் தந்தை, கேரளா மாநிலத்தின் ஓய்வு பெற்ற உயர் காவல்துறை அதிகாரி என்பது விசாரணையில் தெரிய வந்தது.

Share This:
Loading...

Related Posts

Loading...