மூன்று அல்லது அதற்கும் மேலான முறை திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர் நடிகைகள்..!

Share this post:

pi

திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்பார்கள். இந்த பயிர் அனைவரது வாழ்விலும் சரியாக அறுவடை ஆவது இல்லை. சிலர் சகித்து கொண்டு வாழ்கிறார்கள், சிலர் பிள்ளைகளுக்காக பொறுத்துக் கொண்டு வாழ்கின்றனர்.

ஆனால், சிலர் தங்கள் வாழ்க்கையை தீர்மானித்துக் கொண்டு, விவாகரத்து செய்துவிட்டு, வேறு திருமணம் செய்துக் கொள்கின்றனர். ஒருவர் இரண்டு திருமணம் செய்துக் கொள்ள கூடாது என்ற சட்டம் வரும் முன்னர் இரண்டு, மூன்று திருமணம் செய்தவர்கள் ஏராளம்.

இதில், பிரபலங்கள் மட்டும் விதிவிலக்கு அல்ல. கருத்து வேறுபாடு அல்லது வேறு காரணங்களால் மூன்று அல்லது அதற்கும் மேலான முறை திருமணம் செய்துக் கொண்ட கோலிவுட் பிரபலங்கள் பற்றி இனிக் காண்போம்…

ஜெமினி கணேஷன்!
முதன் முதல் காதல் மன்னன் ஜெமினி கணேஷன். பல கவுரவ விருதுகள் பெற்றுள்ள இவர் மூன்று முறை திருமணம் செய்துள்ளார்.

அலமேலு – நான்கு மகள்கள்
நடிகை புஷ்பவல்லி – இரண்டு மகள்கள்
நடிகை சாவித்திரி – ஒரு மகன்

கடைசியாக தனது 78வது வயதில் 36 வயதுமிக்க ஜூலியான எனும் பெண்ணை இவர் திருமணம் செய்துக் கொண்டார் என்ற அரசல்புரசலான தகவல்களும் நிலவுகின்றன.

கமல் ஹாசன்!
கோலிவுட்-ன் இரண்டாம் காதல் மன்னன். நடிப்பு, நடனம், பாடல் எழுதுவது, பாடுவது, இயக்கம் என பன்முகம் கொண்ட மகா கலைஞன்.
வாணி கணபதி – நடன கலைஞரான இவரை பத்து வருட திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்துவிட்டார்.
நடிகை சரிகா – குழந்தை பிறந்த பிறகு தான் திருமணமே செய்துக் கொண்டார். இவரையும் கடந்த 2004-ம் ஆண்டு விவாகரத்து செய்துவிட்டார்.
நடிகை கவுதமி – கமலும், கவுதமியும் லீவ் இன் ரிலேஷன்ஷிப்-ல் இருக்கிறார்கள்.

நடிகை லட்சுமி! மிக பரிச்சியமான தென்னிந்தியா நடிகை லட்சுமி. 15வயதிலேயே நடிக்க வந்தவர் லட்சுமி. இவரும் மூன்று முறை திருமணம் செய்து கொண்டவர்.
பாஸ்கர் – இன்சூரன்ஸ் கம்பெனியில் பணிபுரிந்தவர், இவர்களுக்கு ஐஸ்வர்யா என்ற மகள் இருக்கிறார்.
மோகன் ஷர்மா – பிறகு 1975-ல் மோகன் ஷர்மா என்பவரை திருமணம் செய்துக் கொண்டார், இவரை 1980-ல் விவாகரத்து செய்துவிட்டார்.
சிவச்சந்திரன் – பிறகு நடிகரும், இயக்குனரும் ஆன சிவச்சந்திரனை காதலித்து 1989-ல் திருமணம் செய்துக் கொண்டார்.

ராதிகா சரத்குமார்!
திறமைவாய்ந்த நடிகை என பெயர் பெற்றவர் ராதிகா. பல்வேறு சினிமா விருதுகளை வென்றுள்ளார் ராதிகா. பிரதாப் போத்தன் – திருமணம் செய்து குறுகிய காலத்திலேயே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்துக் கொண்டனர்.
ரிச்சர்ட் ஹார்டி – இவரை 1990-ல் திருமணம் செய்துக் கொண்டார், லண்டனில் செட்டிலும் ஆனார். இவருக்கு ஒரு மகள் உண்டு.
சரத் குமார் – கடைசியாக தான் நடிகர் சரத்குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார்.

சரத் பாபு!
தனது தனித்தன்மை வாய்ந்த குரல் மற்றும் பேசும் தொனிக்காகவே பிரபலமானவர் சரத் பாபு.
ராம பிரபா – 1981-ல் திருமணம் செய்து, 1988-ல் விவாகரத்து செய்துவிட்டார்.
சிநேகா லதா – இவர் எம்.என். நம்பியாரின் மகள், இவரையும் பின்னாளில் விவாகரத்து செய்துவிட்டார். கடைசியாக தனது 61 வயதில் ஒரு பத்திரிக்கையாளர் பெண்மணியை இவர் திருமணம் செய்துக் கொண்டார் என கூறப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...