யாழ்ப்பாணத்து பெண் ஒருவர் தீக்குளித்து தற்கொலை – காரணம் என்ன தெரியுமா..?

Share this post:

tha

தமிழகத்தில் அகதிகள் முகாமில் இருந்த இலங்கை யுவதி ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கும்மிடிப்பூண்டில் உள்ள இலங்கை தமிழர் அகதிகள் முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.

தற்கொலை செய்து கொண்டவர், யாழ்ப்பாணம் – குருநகரில் உள்ள ஓடக்கரை வீதியைச் சேர்ந்த ஜேம்ஸ் என்பவரது மகளான சரோன் கருண்சி (வயது 27) என குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த தீக்காயமடைந்த அவர் கீழ்ப்பாக்கம் அரச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கணவனுடன் ஏற்பட்ட சிறு சண்டையே தற்கொலைக்கு காரணம் என அங்கிருந்து கிடைக்கும் செய்திகளில் அறிய முடிகிறது..

இவருக்கு ஒன்றரை வயதில் அஸ்வின் என்ற மகன் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது குறித்து பொலிஸார் டில்லிபாபு தலைமையில் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் இது குறித்து ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்திரவிடப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share This:
Loading...

Related Posts

Loading...