இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – 13. 09. 2016 இன்றைய ராசிப் பலன்கள்

Share this post:

rasipalan

மேஷம்

சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 4அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மிதுனம்

சந்திராஷ்டமம் இருப்பதால் பழைய பிரச்னைகளை நினைத்துப் பார்த்து கோபப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். தோற்றுவிடுவோமோ என்ற ஒரு அவநம்பிக்கையும் வந்துப் போகும். கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும்.அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்

பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

சிம்மம்

சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கன்னி

புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். அதிஷ்ட எண்: 8அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

துலாம்

உற்சாகமாக எதையும் முன்னின்று செய்வீர்கள். மகளுக்கு நல்ல வரன் அமையும். புது வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 6அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். பூர்வீக சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

தனுசு

குடும்பத்தில் அமைதி நிலவும். தாழ்வுமனப்பான்மையிலிருந்து விடுபடுவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். அதிஷ்ட எண்: 5அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மகரம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதம் ஏற்படும். உறவினர், நண்பர்களின் அன்புத் தொல்லை அதிகரிக்கும். விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். யாரையும் யாருக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 1அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்

குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உடன்பிறந்தவர்களால் வீண் செலவும், மனக்கசப்பும் வந்து நீங்கும். யாரிடமும் உணர்ச்சிவசப்படாமல் இருப்பது நல்லது. வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 9அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். உதவி கேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். அதிஷ்ட எண்: 3அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை

Share This:
Loading...

Related Posts

Loading...