சடலமாக வந்த தாயும் மகளும் : கொலையா! தற்கொலையா?

Share this post:

sad

மட்டக்களப்பு – ஏறாவூர் முஹந்திரம் வீதியில் உள்ள வீடொன்றில் இருந்து பெண்கள் இருவரது சடலங்கள் இன்று மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட சடலங்கள் 56 வயதான தாய் மற்றும் 32 வயதான அவருடைய மகள் ஆகியோரது என ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சடலங்கள் மீட்பு தொடர்பிலும், கொலைகளுக்கான காரணம் மற்றும் கொலை செய்த நபர் தொடர்பிலும் இதுவரை எந்தவித தகவல்களும் தெரியவரவில்லை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தாம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share This:
Loading...

Related Posts

Loading...