இன்றைய நாள் உங்களுக்கு இனிய நாளாக அமையுமா படித்து தெரிந்து கொள்ளுங்கள் – இன்றைய ராசிபலன்கள் 12/09/2016

Share this post:

rasipalan

மேஷம்
உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டதை வாங்கித் தருவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிரே

ராசி குணங்கள் ரிஷபம்
மதியம் 2.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வெளிவட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு

ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் உயரதிகாரி ஒத்துழைப்பார். மதியம் 2.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் பொறுமையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் கடகம்
உங்களுடைய அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்

ராசி குணங்கள் சிம்மம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

ராசி குணங்கள் கன்னி
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்

ராசி குணங்கள் துலாம்
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. கண்டும் காணாமல் சென்றுக் கொண்டிருந்தவர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் விருச்சிகம்
உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொந்த-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டுக் கிடைக்கும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்

ராசி குணங்கள் தனுசு
மதியம் 2.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களைப் பற்றிய வதந்திகளை முறியடித்து முன்னேறுவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

ராசி குணங்கள் மகரம்
கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்காகவும் சாட்சி கையப்பமிட வேண்டாம். மறதியால் விலை உயர்ந்தப் பொருட்களை இழக்க நேரிடும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் உயரதிகாரிகளுடன் மோதல்கள் வரக்கூடும். மதியம் 2.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்

ராசி குணங்கள் கும்பம்
மறைமுக விமர்சனங்களும், தாழ்வுமனப்பான்மையும் வந்துச் செல்லும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். உடல் நலத்தில் கவனம் தேவை. திடீர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

ராசி குணங்கள் மீனம்
உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

Share This:
Loading...

Recent Posts

Loading...