உடலுறவில் ஈடுபட்டால் உடல் எடை அதிகரிக்குமா?

Share this post:

lo

நம்முடன் அலுவலகத்தில் பணிபுரிவோர், நட்பு வட்டாரத்தில் சிலர், ஏன் நீங்களே கூட திருமணத்திற்கு பிறகு உடல் எடை அதிகரித்திருக்கலாம். ஆண்களை காட்டிலும் பெண்களிடம் தான் இது அதிகமாக காணப்படும். குழந்தை பிறந்த பிறகு உடல் எடை கூடுவது என்பது வேறு. அது இயற்கையாக ஹார்மோன் மாற்றங்களால் நிகழும் ஒன்று.

ஆனால், குழந்தை பிறப்பதற்கு முன்பே கூட சில பெண்கள் திடீரென உடல் எடை அதிகரித்து காணப்படுவார்கள். சிலரெல்லாம் பிறந்ததில் இருந்தே தன் உடலை ஒரே மாதிரியாக வைத்திருப்பார்கள். ஆனால், திருமணத்திற்கு பிறகு அடையாளம் தெரியாத அளவு மாறியிருப்பார்கள். இது ஏன்?

கேள்வி
திருமணமான பிறகு சிலருக்கு இந்த சந்தேகம் எழுகிறது. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் பெண்களிடமும், ஆண்களிடமும் உடல் எடை அதிகரிப்பு ஏற்படுவது ஏன்? இதற்கு என்ன காரணம்? அதிலும் முக்கியமாக பெண்கள் மத்தியில் மார்பு மற்றும் இடை பகுதிகளில் அதிக எடை கூடுவது ஏன்? இதற்கும் உடலுறவிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா?

பதில்
பலர் மத்தியிலும் இந்த சந்தேகம் இருக்கிறது. மேலும், சிலர் இதை கண்மூடித்தனமாக பரப்புவதும் உண்டு. ஆனால், திருமணத்திற்கு பிறகு பெண்களின் மார்பு மற்றும் இடை பகுதியில் எடை அதிகரிப்பதற்கும் உடலுறவிற்கும் எந்த சம்மந்தமும் இல்லை. இது ஒருவகையான மூடநம்பிக்கை ஆகும்.

விந்தணுக்களிலும் கலோரிகள் இருக்கின்றன. ஆனால் மிகவும் குறைவு, ஏறத்தாழ 2-3 மில்லி விந்தில் 15 கலோரிகள் தான் எனப்படுகிறது. இதன் காரணத்தால் பெண்களின் இடை பகுதியில் உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் இல்லை.

ஆய்வுகள்
திருமணதிற்கு பிறகு உடல் எடை அதிகரிப்பதற்கு என்ன காரணம் என கண்டறிய பல ஆய்வுகள் நடத்தப்பட்டன. ஆனால், எதிலும் தெளிவான தகவல்கள், முடிவுகள் கிடைக்கப் பெறவில்லை. உடலுறவிற்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா எனக் கூட ஆய்வுகள் நடத்தப்பட்டன, அதிலும் முடிவுகள் ஏதும் ஊர்ஜிதம் செய்யும் அளவில் கிடைக்கவில்லை.

மேலும், உடலுறவில் தொடர்ந்து ஈடுபடுவதால், உடல் எடை கூடும் என்பது சுத்த மூடநம்பிக்கை. திருமணத்திற்கு பிறகு பெரும்பாலும் உடல் எடை மீதான கவனம் மற்றும் உடற்பயிற்சி குறைந்தளவில் இருப்பதும் இதற்கான காரணம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

சில ஆய்வின் முடிவுகளில் திருமணம் ஆகாதவர்ககளைவிட திருமணமானவர்கள் தான் உடல் பருமன் அதிகமாக இருக்கிறார்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இதற்கான ஒரே தீர்வு சீரான உடற்பயிற்சி மட்டுமே ஆகும்.

முக்கிய காரணம்
திருமணத்திற்கு முன்பு வரை தன் உடலை கட்டுகோப்பாக காக்கும் பலர், இதற்கு பிறகு யார் தன்னை பார்க்க போகிறார்கள் என்ற எண்ணத்திலேயே இதை கைவிட்டு விடுகிறார்கள் என்பதும் ஓர் முக்கிய காரணமாக இருக்கிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...