நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதை உணர்த்தும் எச்சரிக்கை அறிகுறிகள்!!!

Share this post:

very

நீங்கள் இன்று எப்படி உணர்கிறீர்கள்? ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்புடனும் இருப்பது போல் உணர்கிறீர்களா? இல்லையெனில், நீங்கள் மன அழுத்தத்திற்கு அல்லது மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்று அர்த்தம். ஒருவர் மனதளவில் பாதிக்கப்பட்டால், எதிலும் சரியாக கவனத்தை செலுத்த முடியாமல் இருப்பதோடு, அதனாலேயே உடலினுள் பல பிரச்சனைகள் ஏற்பட ஆரம்பமாகிவிடும்.

அப்படி உங்கள் உடலில் பிரச்சனைகள் ஆரம்பமாகியிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளைக் கொண்டே நீங்கள் ஆரோக்கியமாக இல்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அந்த அறிகுறிகளை ஆரம்பத்திலேயே தெரிந்து கொண்டால், தீவிர பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். உங்களுக்கு அந்த அறிகுறிகள் என்னவென்று தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.

அடர் நிறத்தில் சிறுநீர்
நீங்கள் வெளியேற்றும் சிறுநீரின் அளவு குறைவாக இருந்து, அடர் நிறத்தில் இருந்தால், உங்களின் உடலில் போதிய அளவில் நீர்ச்சத்து இல்லை என்றும், உங்கள் கல்லீரலில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் உடனே மருத்துவரை அணுகுவதோடு, குடிக்கும் நீரின் அளவையும் அதிகரிக்க வேண்டும்.

தூக்கமின்மை
தினமும் 8 மணிநேரத் தூக்கம் மிகவும் அவசியமானது. ஆனால் சரியாக தூங்காமல் இருந்தால், அவர் மனதளவில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார் என்று அர்த்தம். அதுமட்டுமின்றி, தூக்கமின்மை வேறுசில பிரச்சனைகளுக்கும் ஓர் அறிகுறி என்பதால், மருத்துவரை அணுகி ஆலோசனைப் பெறுங்கள்.

எடை அதிகரிப்பு
உங்கள் இடுப்பு, வயிறு, தொடை போன்றவற்றில் கொழுப்புக்கள் அதிகம் சேர ஆரம்பித்தால், உங்கள் இதயம் விரைவில் பாதிக்கப்படும். எனவே அப்பகுதிகளில் கொழுப்புக்கள் சேர்வது போன்று தோன்றினால், உடனே உடற்பயிற்சியில் ஈடுபட ஆரம்பியுங்கள். இல்லாவிட்டால் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

மிகுந்த சோர்வு
நீங்கள் மிகுந்த சோர்வை உணர்பவராயின், அதற்கு முதற் காரணம் உண்ணும் உணவு, மற்றொன்று உங்களுக்கு தைராய்டு உள்ளது என்று அர்த்தம். எனவே கவனமாக இருங்கள்.

குறட்டை
நீங்கள் தூங்கும் போது அருகில் உள்ளோரின் தூக்கத்தைக் கெடுக்கும் வகையில் குறட்டை விடுபவராயின், உங்களுக்கு சுவாச பிரச்சனை உள்ளது என்று அர்த்தம். குறட்டையை நிறுத்தும் செயல்களில் ஈடுபடாவிட்டால், அதனால் உங்களின் நுரையீரலுக்குரிய குழாயில் இரத்த அழுத்தம் அதிகம் ஏற்பட்டு, அதன் காரணமாக நாளடைவில் இதய செயலிழப்பு ஏற்படும் ஆபத்தும் உள்ளது.

முகப்பரு
திடீரென்று உங்கள் முகம் பொலிவிழந்து, பருக்கள் அதிகமாக காணப்பட்டால், அதற்கு நீங்கள் மன அழுத்தத்துடன் உள்ளீர்கள் என்று அர்த்தம். எனவே மன அழுத்தத்தைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடுங்கள். இல்லாவிட்டால், மன அழுத்தமே உங்களின் ஆரோக்கியத்தை முழுமையாக கொன்றுவிடும்.

மாதவிடாய் தவறுதல்
தற்போதைய இளம் பெண்கள் பலரும் சந்திக்கும் ஓர் பிரச்சனை மாதவிடாய் தவறுவது. பொதுவாக மாதவிடாய் சுழற்சியானது கர்ப்பமாக இருந்தால் அல்லது ஹார்மோனில் ஏற்பட்ட மாற்றத்தினால் ஏற்படும். அதிலும் இன்றைய கால பெண்கள் பிசிஓஎஸ் பிரச்சனையினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இப்பிரச்சனை முற்றினால் அவர்கள் கருத்தரிப்பதில் பிரச்சனை ஏற்படும். எனவே மாதவிடாய் தவறினால், உடனே மருத்துவரை அணுகுங்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...