இன்றைய நாள் உங்களுக்கு எப்படி அமைய போடுறது என தெரியுமா…?படியுங்க தெரிஞ்சுக்கலாம் – இன்றைய ராசிபலன் 11/09/2016

Share this post:

rasipalan

மேஷம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் ரிஷபம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். பிள்ளைகளின் வருங்காலம் குறித்த கவலைகள் வந்துப் போகும். மற்றவர்கள் விஷயத்தில் அத்துமீறி மூக்கை நுழைக்க வேண்டாம். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் உங்களைப் பற்றிய விமர்சனங்கள் அதிகமாகும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், கிளிப்பச்சை

ராசி குணங்கள் மிதுனம்
கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். தாயாரின் உடல் நிலை சீராகும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் பணிகளை விரைந்த முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ஊதா

ராசி குணங்கள் கடகம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், வெளீர்நீலம்

ராசி குணங்கள் சிம்மம்
புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் ஆதாயமடைவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மிண்ட்கிரே, வைலெட்

ராசி குணங்கள் கன்னி
எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். பயணங்களால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, நீலம்

ராசி குணங்கள் துலாம்
துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு பக்கபலமாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் சுமூக தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, கிரே

ராசி குணங்கள் விருச்சிகம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். கோபம் குறையும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எல்லோரும் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிளிப் பச்சை

ராசி குணங்கள் தனுசு
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எந்த காரியத்தை தொட்டாலும் இரண்டு, மூன்று முறை முயன்று முடிக்க வேண்டி சூழ்நிலை உருவாகும். பண விஷயத்தில் சாக்கு போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெளிர் மஞ்சள், ப்ரவுன்

ராசி குணங்கள் மகரம்
குடும்பத்தினரிடம் கோபத்தை காட்டாதீர்கள். யாருக்கும் பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்க வேண்டாம். உறவினர், நண்பர்களால் சங்கடங்கள் வரும். லேசாக தலை வலிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, வெள்ளை

ராசி குணங்கள் கும்பம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மனதிற்கு இதமான செய்திகள் வரும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: அடர் சிவப்பு, இளம்மஞ்சள்

ராசி குணங்கள் மீனம்
உங்களின் அணுகுமுறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, ரோஸ்

Share This:
Loading...

Related Posts

Loading...