சுவிட்ஸர்லாந்தில் வாழும் இலங்கையர்களுக்கு சுவிஸ் அரசு வைத்த ஆப்பு..!! – என்ன தெரியுமா…?

Share this post:

aaa

அரசியல் தஞ்சம் கோரி சுவிட்ஸர்லாந்தில் தஞ்சமடைந்துள்ள இலங்கையர்களுக்கு இந்தியா செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் அரசியல் தஞ்சமடைந்து நீலநிற கடவுச்சீட்டை வைத்திருக்கும் இலங்கையர்களுக்கே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சுவிட்ஸர்லாந்து அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்க இந்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

கடந்த காலங்களில் நீலநிற கடவுச்சீட்டை வைத்திருந்த சில இலங்கையர்கள் இந்தியாவிற்குச் சென்று அங்கிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குச் சென்றமைக்கான ஆதாரங்கள் சுவிட்ஸர்லாந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்திடம் இருக்கின்றது.

இதன்படி அரசியல் தஞ்சம் கோரி ஒருவர் சுவிட்ஸர்லாந்து நாட்டிற்குள் வந்தால் அந்த நாட்டில் சுமூகமான நிலை ஏற்படும் வரை நாட்டிற்கு திரும்ப முடியாது என்பதை நீலநிற கடவுச்சீட்டு வைத்திருக்கும் அரசியல் தஞ்சமடைந்துள்ளவர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவித்தலை சிலர் மீறிச் சென்றதனாலேயே தற்போது நீலநிற கடவுச்சீட்டு வைத்திருக்கும் அனைத்து இலங்கையர்களுக்கும் இந்தியாவிற்கான பயணம் கேள்விக்குறியாகி உள்ளது.

இவ்விவகாரத்தால் எதிர்காலத்தில் பாரிய சவால்களை நிலநிற கடவுச்சீட்டு வைத்திருப்போர் எதிர்நோக்கவேண்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்த விடயத்தை சுவிட்ஸர்லாந்தில் உள்ள இந்தியத் துாதரகம் உறுதிப்படுத்தியுள்ளது.

சுவிஸில் முதன்முறையாக இலங்கை கலாசார, வர்த்தக உணவுப் பெருவிழா

சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில் உள்ள இலங்கை துணைத் தூதரகம் இலங்கையின் கலாசார, வர்த்தக மற்றும் உணவு பெருவிழாவை நடத்த உள்ளது.

இந்த விழா எதிர்வரும் 09, 10, 11 திகதிகளில் நடைபெறவுள்ளதாக துணைத்தூதரகம் அறிவித்துள்ளது.

மேற்படி பெருவிழாவிற்கான அனுமதி இலவசம், விழாவில் 60 வீத இலங்கையர்களும், 40 வீதமான சுவிஸ் பிரஜைகளும் என 6 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரையானவர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்ப்பதாகவும் துணைத் தூதுவர் விதர்சன முனசிங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

சுவிஸ் வாழ் இலங்கை மக்களின் ஏகோபித்த ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெரு விழாவில் இலங்கையின் முன்னணி வர்த்தக நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இலங்கையின் வங்கிகள், ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, ஏற்றுமதி நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், ஆயுர்வேத நிறுவனங்கள், விமான போக்குவரத்து நிறுவனங்கள், அழகு சாதன, அழகு கலை நிறுவனங்கள், தொலைத் தொடர்பு சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் உட்பட சுவிட்சர்லாந்தின் பல்வேறு நிறுவனங்களும் கலந்து கொள்ளவுள்ளன.

இலங்கையின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் சிறப்பாக வெளிக்கொணரும் இந்த நிகழ்வை சிறப்பாக நடத்தி முடிக்க அனைவரது ஆதரவை வேண்டி நிற்பதாக விதர்சன முனசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...