நண்பனை நம்பி வீட்டில் தங்க வைத்தவருக்கு நடந்த விபரீதம்!

Share this post:

nan

கம்பஹா மாவட்டம் தெம்பே பிரதேசத்தில் நண்பன் வீட்டில் ஒருவாரம் தங்கியிருந்த நபர் ஒருவர் நண்பனின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

வியாபாரம் தொடர்பாக வந்த இந்த நபர் நண்பரின் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.

வீட்டு உரிமையாளரின் பாடசாலை நண்பன் வீட்டில் தங்கியிருந்த காலத்தில் நண்பனின் மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

வீட்டு உரிமையாளரான நண்பன் வேலைக்கு சென்ற பின்னர், பாடசாலை நண்பன், மனைவியுடன் இவ்வாறு காதல் தொடர்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளார்.

ஒரு நாள் வீட்டு உரிமையாளர் வேலை செய்யும் இடத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்களை மறந்து வீட்டில் வைத்து விட்டுச் சென்று பின்னர், அதனை எடுத்துச் செல்ல வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது தனது பாடசாலை நண்பன், தனது மனைவியுடன் சயனத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுள்ளார்.

“மனைவியுடன் தொடர்பை ஏற்படுத்தவா உன்னை வீட்டில் தங்கவைத்தேன், இரண்டு பேரையும் கொண்டு விடுகிறேன் பார்”, என சத்தமிட்டவாறு நண்பனை தாக்கியுள்ளார்.

இதேவேளை, சம்பவம் இடம்பெற்ற போது அயல் வீட்டவர்கள் வந்து தடுத்துள்ளனர்.

மேலும், வீட்டு உரிமையாளரின் பாடசாலை நண்பன் நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் கூறப்படுகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...