மாணவியிடம் கட்டாய காதல் – மறுத்த பெண்ணின் அம்மாவை வெட்டிச்சாய்த்து இளைஞன் வெறித்தனம்…!

Share this post:

qwo

காவேரி(பெயர் மாற்றப்பட்டுள்ளது) வயது 15 இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு பாடசாலையில் 9 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

இவரை அதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார்(20) என்ற இளைஞன் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் தன் காதலை ஏற்குமாறு தொல்லை கொடுத்து வந்துள்ளார்.

இது குறித்து மாணவி அவரது பெற்றோரிடம் கூறவே சிதம்பரம் பொலிஸ் நிலையத்தில் சிறுமியின் பெற்றோரால் செந்தில்குமார் மேல் முறைப்பாடு கொடுக்கப்பட்டுள்ளது.

பின்னர் பொலிஸார் விசாரனை செய்து கண்டித்துள்ளனர்.இதனை தொடர்ந்தும் செந்தில்குமார் அம்மாணவியை பின் தொடர்ந்து தொல்லை கொடுத்துள்ளார்.

பின்னர் இதுகுறித்து பெற்றோர்கள் அவரிடம் நேரிடையாகவும் கண்டித்துள்ளனர்.அப்போதும் அதை பற்றி கவலையில்லாமல் மாணவியிடம் பாடசாலை செல்லும் போதும் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால் பெற்றோர்கள் மாணவியை பாடசாலையினை விட்டு நிறுத்திவிட்டனர்.இந்நிலையில் மாணவியை விட்டைவிட்டு வெளியே அனுப்பாததால் ஆத்திரமடைந்த செந்தில்குமார் நேற்று மாலை 7 மணியளவில் மாணவியின் வீட்டுக்கு சென்று அவரது தாய் ஜெயாவிடம் நான் உன் மகளை காதலிக்கிறேன் எனக்கு திருமணம் செய்து வையுங்கள் என சண்டையிட்டுள்ளார்.

இதனால் இருவருக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது.பின்னர் வாக்குவதம் முற்றி செந்தில்குமார் மாணவியின் தாய் ஜெயாவை அருவாலால் சராமறியாக வெட்டியுள்ளார்.

ஜெயா இறந்து விட்டார் என்று கருதி செந்தில்குமார் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டார்.

பின்னர் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிதம்பரம் ராஜாமுத்தையா வைத்திய கல்லூரி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

பின்னர் அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்றுவருகிறார்.அவர் உயிர் பிழைப்பது அரிது என்று பொலிஸார் கூறுகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...