யாழ் மாவட்டத்திற்கு இப்படி ஒரு அதிஷ்டமா???

Share this post:

yaal

யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்குகள் வெகுவிரைவில் அமைக்கப்படவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து பாகங்களிலும் கிரிக்கெட் விளையாட்டை விருத்திசெய்ய இலங்கை கிரிக்கெட் சபை முதலீடுகளை செய்து வருகின்றது.

அந்த வகையில் பொலநறுவை மற்றும் யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் அரங்குகளை அமைக்க இலங்கை கிரிக்கெட் சபை தனித்து நிதியொதுக்கியுள்ளது.

குறித்த இரு கிரிக்கெட் அரங்குகளின் நிர்மாணப் பணிகளை முன்னெடுப்பதற்கு இலங்கை கிரிக்கெட் சபையின் நிர்வாகக் குழு அங்கீகாரமளித்துள்ளது.

கிரிக்கெட் நிர்மாணப் பணிகளுக்காக 200 மில்லியன் ரூபா செலவாகுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

இரு அரங்க நிர்மாணப் பணிகள் தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வா மேலும் தெரிவிக்கையில்,

நாம் யாழ்ப்பாணம் மற்றும் பொலநறுவையில் கிரிக்கெட் அரங்கை அமைப்பதற்காக இரு அரங்க நிர்மாணப்பணிகளுக்கும் தலா 100 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளோம்.

குறித்த இரு திட்டங்களும் வெகுவிரைவில் ஆரம்பிக்கப்படும். மிக விசாலமான விளையாட்டுத் தொகுதியை உள்ளடக்கியதாக இரு கிரிக்கெட் அரங்குகளும் அமைக்கப்படவுள்ளன.

இதேவேளை, யாழ்ப்பாணத்தில் கிரிக்கெட் அரங்கை நிர்மாணிப்பதற்கு பிரதான பாதையை அண்டிய, மக்களின் தேவைகளை நிவர்த்திசெய்யக்கூடிய பிரதேசத்தை இலங்கை கிரிக்கெட் சபை ஆராய்ந்து வருகின்றது.

முதலில் இரு அரங்குகளும் முதல்தர கிரிக்கெட் மைதானங்களாக நிர்மாணிக்கப்பட்டு பின்னர் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு ஏற்றதாக அபிவிருத்திசெய்யப்படும்.

வடக்கு மற்றும் கிழக்கில் கிரிக்கெட் விளையாட்டை விருத்தி செய்யவும் அதனுடைய தராதரத்தை மேம்படுத்துவதுமே எமது தேவையாகுமென அவர் மேலும் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...