நன்றி கெட்ட இயக்குனர் – எஸ்கேப் ஆன “தல”… வசமாக சிக்கிய “சூர்யா”..!

Share this post:

ssss

இயக்குனர் மற்றும் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிக்க நயன்தாரா அஜித்குமாரை தொடர்பு கொண்டார். ஆனால், அஜித் மறுத்து விட்டார். நாள் ஒன்றுக்கு ஒரு கோடி சம்பளம் தருகிறேன் என்றும் ஓப்பனாக கூறி பார்த்து விட்டார் அதற்கும் அஜித் முடியாது என்று மறுத்து விட்டார்.

இதற்க்கு காரணம், இயக்குனருக்கும் தன்னுடைய பரம வெறியனான சிம்பு-விற்கும் இருந்த மன கசப்பு தான் என்று கூறுகிறார்கள். முதல் படத்திலேயே புதுமுக இயக்குனரான விக்னேஷ்சிவனுக்கு வாய்ப்பு வழங்கிய சிம்புவுக்கு அவர் அளித்த பரிசு என்ன என்பதை அனைவரும் அறிவோம்.

ஒரு விழாவில், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே தனுஷ் தான் என்று சிம்பு முன்னிலையிலேயே பகிரங்கமாக தெரிவித்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இது சிம்பு ரசிகர்கள் மட்டுமின்றி அஜித் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சி அடைய செய்தது. நன்றி மறந்த இயக்குனருடன் பணத்திற்காக நடிப்பதா? என்று திட்டவட்டமாக மறுத்திருக்கிறார் அஜித்.

ஆனால், நயன் வீசிய வலையில் வெள்ளந்தியாய் தற்போது சிக்கி இருக்கிறார் சூர்யா. நாளை நடக்கும் ஏதாவதொரு விழாவில், இத சொல்லியே ஆகணும் சூர்யா தான் எனக்கு வாழ்க்கை கொடுத்தவர் என்று தனுஷ் முன்னிலையிலேயே விக்னேஷ்சிவன் கூறினால் ஆச்சரியபடுவதற்கில்லை தானே.

Share This:
Loading...

Recent Posts

Loading...