தர்மேந்திராவை இடம்மாற்ற பாணந்துறை,கொழும்பு என அலைந்து திரியும் MP சிவமோகன் !

Share this post:

ssss

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது தன் அரசியல் பலத்தை பயன்படுத்தி mp சிவமோகன் சாட்டிய குற்றங்கள் யாவும் தனிப்பட்ட பகை காரணமாக ஏற்படுத்தப்பட்டது என்பதாலும்

அவையாவும் பாராளுமன்ற உறுப்பினரின் அதிகார துஸ்பிரயோகம் என்பதாலும்

தனக்கு வேண்டியவர்களிடம் தர்மேந்திராவுக்கு இடமாற்ற கடிதம் தயாராக உள்ளது .எனவும் விட்ட அறிக்கைகளால் அதை பொய்யாக்க முடியாமலும்

வவுனியாவில் தலைக்காட்ட முடியாமலும் போக

பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகன் அவர்கள் நீதிநெறிப்படி நடந்து கொள்ளும் மற்றும் அடுத்தவர் கதைகளை கேட்காத முதலமைச்சரிடம் தன் நரித்தனங்கள் பலிக்காது என்பதனாலும்

வவுனியாவை சிங்கள மயமாக்கும் திட்டம் இவரிடம் தான் சிங்கள அரசு கொடுத்திருப்பதாக பொருள் பட அண்மையில் ஊடகங்களில் வெளியான செய்திகளை நிரூபிக்கும் வகையிலும்

mp சிவமோகன் அவர்கள் இன்று கொழும்பில் உள்ள சில சிங்கள அமைச்சர்கள் அலுவலகங்களில் தர்மேந்திராவை இடமாற்றம் செய்யும் வேலைகளை மும்மரமாக முன்னெடுத்து வந்தார் என அவரது கூட்டாளிகளே உளறியுள்ளனர் .

அத்துடன் முதலமைச்சருக்கு எதிராக வடக்கு மாகாண சபை தீர்மானங்களிலும் முதலமைச்சரின் தீர்மானங்களிலும் தலையீடு செய்யும் இவர் வடக்கில் ஆளுநர் இல்லாத காரணத்தினால் அவரை கொழும்பில் தேடியும் காணவில்லை என்பதால் அவரது தங்குமிடம் தேடி பாணந்துறைக்கே சென்று அலைந்துள்ளார்

அத்துடன் நின்றுவிடாமல் உள்ளுராட்சி மத்திய அமைச்சர் பைசர் முஸ்தபா அவர்களையும் சந்தித்து தர்மேந்திராவுக்கு உடனடியாக இடமாற்றம் கொடுக்கும் படி கெஞ்சிக்கேட்டுள்ளார்.

தனது காருக்கு பெற்றோல் அடித்து ஒருவர் மீது இருக்கும் தனிப்பட்ட பகையை தீர்க்க சிவமோகன் கொழும்பு பாணந்துறை என அலைந்த அலைப்பு அவர் மீது இரக்கத்தையும் அவரது ஒருவித வித்தியாசமான போக்கு ஒருவித பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

இப்படியான சராசரிமனிதர்களிலும் குறைந்தவர்களை வன்னி மக்கள் எப்படி தெரிவு செய்தார்களோ ?
MP சிவமோகனிடம் சில கேள்விகள் ………

01.தங்களது முறைதவறிய அபிஷா வைத்திய சாலைக்கு முறைதவறிய முறையில் தர்மேந்திரா அனுமதி வழங்கவில்லை என்ற தனிப்பட் ட பிரச்சினையை பகையாக கொண்டு தர்மேந்திராவை இடமாற்றம் செய்ய முனைவது வன்னி மக்களை அடி முட்டாள் ஆக்குகிறது என்பதை மக்கள் உணர்ந்திருப்பார்கள் என்பதை தங்கள் எப்போது உணரப்போகுறீர்கள் ?

02.வவுனியா நகரசபை செயலாளர் தவறே செய்திருந்தாலும் அதை சுட்டிக்காட்டி அதற்கான விளக்கங்களையும் விடைகளையும் கேட்க்கும் அதிகாரம் தங்களிடம் இருந்ததே அதை தாங்கள் செய்யாமல் முதலமைச்சருக்கு முறைப்பாட்டு கடிதம் எழுதியது ஏன் ?

03.முதலமைச்சருக்கு முறைப்பாட்டு கடிதம் எழுதிய போது விசாரணைகள் நடத்தப்படும் என முதலமைச்சரின் பதில் கிடைத்தும் மறுநாள் ஆளுநரை சந்தித்து தர்மேந்திராவுக்கு இடமாற்றம் பற்றி கோரியது ஏன் ?

04. தங்களிடம் தர்மேந்திரா ஊழல் மோசடியில் ஈடுபட்டமைக்கான ஆதாரங்கள் நிறையவே இருக்கின்றன என ஊடகங்களுக்கு தெரிவித்திர்களே அவற்றை ஏன் முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கவில்லை ?

05.ஒட்டு மொத்த நகரசபையில் தர்மேந்திரா வருமுன்னர் புஸ்பலதா மற்றும் அம்பிகைபாலன் செய்த குற்றங்களையும் சேர்த்து தர்மேந்திரா மீது இன்று சாட்டினால் அவை முன்னைய செயலாளரை சாரும் என்ற அடிப்படை விளக்கம் கூட இல்லாதவரா நீங்கள் ?

06.உங்கள் பிரதேசத்தில் நீங்கள் ஒரு அரசியல்வாதி என நன்கு தெரிந்திருந்தும் ஊழல் மோசடிக்கு தாங்கள் தர்மேந்திராவை (அபிஷா வைத்தியசாலை தொடர்பில் )தூண்டிய போதும் அதை செய்யாது நகரசபை விதிகள் கொள்கைகளை பின்பற்றிய தர்மேந்திராவை தாங்கள் ஒரு படித்து பாஸ் பண்ணி வந்த வைத்தியர் என்ற வகையில் பாராட்டாமல் பழி போட நினைத்தபோது மக்கள் தங்கள் அரசியலுக்கு முடிவு கட்டுவார்கள் என உணரவில்லையா?

07.தர்மேந்திராவை வவுனியா நகரசபையை விட்டு வெளியேற்றினால் அடுத்து SLAS படித்த ஒரு சிங்களவர் தான் அந்த இடத்தை நிரப்புவார் என்பது தங்களுக்கு நன்றாக தெரிந்திருந்தும்…..

தாங்கள் அதை முனைப்புடன் சிங்கள அரசியல் வாதிகளின் உதவியுடன் இடமாற்ற முயற்சிகளில் ஈடுபடுவது சிங்கள தேசியவாதத்திற்கு துணை போவதையா சொல்ல வருகின்றிர்கள் ?

08.தாங்கள் தர்மேந்திரா மீது சுட்டிக்காட்டிய எந்த ஒரு குற்றச்ச்சாட்டையாவது நகரசபை விதிகள் கொள்கைகளுக்கு ஏற்பவும் மனசாட்சி அடிப்படையிலும் நிரூபிக்க முடியுமா ?

09.வவுனியா நகரசபையில் முன்னர் வேலை செய்த அம்பிகைபாலன் மற்றும் இன்றைய பணியாளர் புஸ்பலதா போன்றோர் நகரசபை விதிகள் கொள்கைகளை மீறியதால் தர்மேந்திராவின் கண்டிப்புக்கு உள்ளானவர்கள் .

இவர்களது அத்திவாரம் முதல் அந்தரங்கங்கள் வரை எம்மிடம் உள்ள போதிலும் இதில் பல நகரசபை உயர் அதிகாரிகள் மற்றும் இடமாற்றம் பெற்ற அதிகாரிகளின் பெயர்களும் அடிபடுமே என்பதனால் நாம் வெளியிடவில்லை .இவர்களின் துணையோடு தங்கள் முயற்சிப்பது தங்களை வைத்தியரா என எண்ணத்தோன்றுகிறதே ?

10.சிவமோகன் அய்யா அவர்களே தங்களை பற்றியும் எம்மிடம் பல குற்றச்ச்சாட்டுகள் நம்பக்கூடியவாறு பலர் அனுப்பியுள்ளனர் .

தாங்கள் தர்மேந்திரா மீது ஆதாரமற்ற குற்றச்ச்சாட்டை கூறியது போல் தாங்கள் அனுமதித்தால் நாமும் இருக்கும் ஆதாரங்களை மட்டும் வைத்துக்கொண்டு வெளியிட தயாராக உள்ளோம் !

11.இதுவரையில் 2010 தொடக்கம் 2016 வரை அதாவது 6 வருடங்களில் 4 வவுனியா நகரசபை செயலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் யாவற்றிலும் ஊழல் மோசடி குற்றமே சாட்டப்பட்டது.அப்படியென்றால் SLAS கவிமுறையில் களவு பற்றியா கற்பிக்கிறார்கள் ?ஆனால் இதுவரையில் ஊழல் மோசடிக்கு தூண்டும் புஸ்பலதா போன்றவர்கள் மாற்றப்படவில்லையே ?ஏன் என்று ஒருமுறையாவது சிந்திக்க மாட்டீர்களா ?

“தன் இனத்துக்கு எதிராக பிரயோகிக்கப்படும் முறையற்ற பலம்கள் முடிவில் பிரயோகித்தவர்க்கு முடிவில்லா ஒரு முடிச்சரிவை தந்துள்ளது”

தொடருமானால் தொடரும் …………

நன்றி -yarl today

Share This:
Loading...

Related Posts

Loading...