இலங்கையின் முதலாவது இராணுவ தளபதி தமிழர்..!

Share this post:

ar

ஒவ்வொரு பொலிஸ் நிலையங்களுக்கும் தலா இரு தமிழ் பேசும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் வீதம் நியமிக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இராணுவம், பொலிஸ் மற்றும் சிறைச்சாலைக்கு கூடுதலான தமிழ் உத்தியோகஸ்தர்களை நியமிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஐ. ம. சு. மு பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும பிரதமரிடம் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும் பதிலளித்த பிரதமர்:

இலங்கையின் முதலாவது இராணுவ தளபதி தமிழராவார். 1978 களில் புலிகள் குறித்து தமிழ் அதிகாரிகளே விசாரணை முன்னெடுத்தனர். இவர்கள் புலிகளினால் கொலை செய்யப்பட்டதனால்இராணுவத்தில் தமிழர்கள் இணைவது குறைவடைந்தது. மேலும் பொலிஸ் மற்றும் இராணுவத்தில் தமிழர் இணைவது கூடாது என அழுத்தம் கொடுக்கப்பட்டது.

முன்பு இராணுவத்தில் தமிழ் அதிகாரிகளும் உத்தியோகஸ்தர்களும் பணிபுரிந்தார்கள். 1983 கலவரத்தின் பின்னர் இவர்களின் தொகை மேலும் குறைவடைந்தது.
இறுதிக் கட்ட யுத்தத்தின்போது படைக்கு ஆளணி தேவைப்பட்டவேளை வேறு பகுதிகளில் இருந்தே ஆட்கள் இணைந்தனர்.

கான்ஸ்டபிள் பதவிக்கு 216 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 151 பேர் வடக்கில் இருந்து நியமனமாகினர். இது ஆரம்ப செயற்பாடு மாத்திரமே சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள், பொலிஸ் சாரதி பதவிகளுக்கு ஆட்கள் நியமிக்கப்பட உள்ளதோடு வடக்கு கிழக்கில் இருந்து இவர்கள் கூடுதலாக நியமிக்கப்படவுள்ளனர். தோட்டப்

பகுதிகளில் கல்வித் தகைமை இல்லாததால் அதிகமானவர்கள் பொலிஸ் பதவிகளுக்கு நியமிக்கப்படவில்லை.

2015 இல் சிறைச்சாலைக்கு 409 பேர் நியமிக்கப்பட்டனர். இதில் 9 பேர் தமிழ் பேசும் அதிகாரிகளாவர்.

பாதுகாப்பு தரப்பு, பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சேர்க்கும் தமிழ் உத்தியோகஸ்தர்களின் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...