ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் உறவில் எதிர்பார்ப்பது என்ன தெரியுமா?

Share this post:

news_16-01-2015_100coupple

இன்றைய காலத்தில் ஓர் உறவைத் தக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு துணையின் எதிர்பார்ப்புக்களை தெரிந்து கொள்ளாமல் இருப்பதோடு, பூர்த்தி செய்யாமல் இருப்பது முக்கிய காரணமாக உள்ளது.

இதனால் உறவுகளுக்குள் நிறைய பிரச்சனைகள் எழுந்து, அதனால் அந்த உறவே முறிந்துவிடும் நிலையில் செல்கிறது. நம் மக்களிடையே ஜாதகத்தின் மேல் அலாதியான நம்பிக்கை உள்ளது.

மேலும் ஒருவரின் ஜாதகம் மற்றும் ராசியைக் கொண்டு, அவரது குணங்கள், எதிர்காலம், வரப்போகும் துணை போன்ற பல விஷயங்கள் கணிக்கப்படுகிறது.

அதேப்போல் ஒருவரின் ராசியைக் கொண்டு, அவர் தங்களது உறவில் என்ன எதிர்பார்க்கிறார் என்பதையும் அறிய முடியுமாம். இங்கு ஒவ்வொரு ராசிக்காரரும் தங்கள் உறவில் எதிர்பார்ப்பது என்ன என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஒருவருடனான உறவில் எப்போதும் விளையாடமாட்டார்கள். இந்த ராசிக்காரர்கள் தங்களுக்கு வரும் துணை நேர்மையாகவும், பிரச்சனைகளை தைரியமாக எதிர்கொள்ளும் படி இருக்க வேண்டுமென விரும்புவார்கள். மேஷ ராசிக்காரர்கள் பொறுமையற்றவர்கள் மற்றும் முன்கோபம் கொண்டவர்கள்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் பிடிவாத குணமுள்ளவர்கள் மற்றும் மிகவும் சென்சிடிவ்வானவர்கள். இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணை சாந்தகுணமுள்ளவர்களாகவும், உணர்வுகளை மதிக்கக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இவர்களுக்கு கோபம் வந்தால், அது நீண்ட நேரம் நிலைத்திருந்தாலும், இறுதியில் மன்னித்துவிடுவார்கள்.

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் எந்த ஒரு விஷயத்தையும் மிகவும் ஆற்றலுடனும், துணிச்சலுடனும், மிகுந்த உற்சாகத்துடனும் மேற்கொள்வார்கள். அதேப் போல் தங்களுக்கு துணையும் இருக்க வேண்டுமென நினைப்பார்கள். முக்கியமாக இந்த ராசிக்காரர்கள் தங்கள் துணையுடன் நீண்ட நேரத்தை செலவழிக்க விரும்புவார்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்கள் மிகவும் விசுவாசமானவர்கள். எனவே தனக்கு வரும் துணையும் அப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்கள். தனக்கு வரும் துணையும் அதே தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் தன் துணை எப்போதும் தன்னுடன் இருக்க விரும்புவார்கள்.

கன்னி
கன்னி ராசிக்காரர்கள் கருணை உள்ளம் கொண்டவர்கள். இந்த ராசிக்காரர்க்ள தங்களுக்கு வரும் துணையும் கருணையுள்ளம் கொண்டவர்களாக இருக்க விரும்புவார்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் அமைதியான ராஜதந்திரிகளாக கருதப்படுகின்றனர். இவர்கள் எப்போதும் அமைதியையும், ஒற்றுமையையும் விரும்புவதால், அது அவர்களை சிறந்தவர்களாக காட்டும். இதனால் இவர்கள் தனக்கு வரும் துணையும் சண்டைப் போடாமல், அமைதியானவராக இருக்க விரும்புவார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையின் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள். எனவே விருச்சிக ராசிக்காரர்களிடம் எப்போதும் நேர்மையாக இருங்கள் மற்றும் அவர்களை ஏமாற்ற நினைக்காதீர்கள்.

தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் அதே சமயம் ஒருவரை நேசித்தால், உண்மையாக இருப்பார்கள். எனவே இவர்களது அன்பைப் பெற நினைத்தால், நல்ல விசுவாசமான ஓர் நண்பராக இருங்கள். இதனால் அவர்கள் எளிதில் மடக்கிவிடலாம்.

மகரம்
மகர ராசிக்காரர்கள் பொறுப்புள்ளவர்கள் மற்றும் கடின உழைப்பாளிகள். இந்த ராசிக்காரர்கள் தனக்கு வரும் துணையும் தன்னைப் போலவே பொறுப்புள்ளவர்களாக இருக்க விரும்புவர். இதற்கு இப்படிப்பட்டவர்கள் உறவில் மட்டுமின்றி எதிவும் மிகவும் கவனமாக இருப்பார்கள் என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் துணிவானவர்கள், அதே சமயம் கலகத்தனம் புரிபவர்கள். இந்த ராசிக்காரர்கள் தாங்கள் நினைப்பது அனைத்துமே சரியானது என்ற எண்ணம் கொண்டிருப்பார்கள். மேலும் இவர்கள் தங்களுக்கு வரும் துணையும், தங்களது கருத்தை ஒப்புக் கொள்ள வேண்டும். என்று விரும்புவார்கள். அது அனைத்து விஷயங்களிலும் இல்லாவிட்டாலும், சில விஷயங்களிலாவது ஒப்புக் கொள்ள வேண்டும் என விரும்புவார்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்கள் மிகவும் சென்சிடிவ்வானர்கள். இவர்கள் மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க விரும்புவார்கள். இந்த ராசிக்காரர்கள் அன்புடனும், அக்கறையுடனும், சௌகரியத்தை உணரும்படியான துணை வேண்டுமென விரும்புவார்கள். மேலும் இவர்கள் தனக்கு வரும் துணையிடமிருந்து இனிமையாக பேச்சுக்களை கேட்டாலே போதுமென நினைப்பார்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...