‘இந்தப் படம் ரிலீசானா உங்களைக் கொன்னுடுவாங்க!’ – இயக்குநரை எச்சரித்த சென்சார் – அசராத இயக்குனர்..!

Share this post:

ri

பகிரி படம் வெளியானால் உங்களைக் கொல்லவும் தயங்க மாட்டார்கள். எச்சரிக்கையாக இருங்கள், என்று படத்தின் இயக்குநரிடம் சென்சார் குழு உறுப்பினர்கள் கூறியுள்ளனர்.

இதுகுறித்து பகிரி பட இயக்குநர் இசக்கி கார்வண்ணனிடம் கேட்டோம். அவர் கூறுகையில், “என்னை மிரட்டியது அதிகாரிகள் அல்ல… கீழ்மட்டத்தில் உள்ள மெம்பர்கள் ‘இந்த படம் ரிலீஸானால் உங்களைக் கொன்று விடுவார்கள்’ என்று நேரடியாகவே எச்சரித்தார்கள். நான் சிரிப்பை மட்டுமே பதிலாகத் தந்தேன்.

தவிர படத்தில் ஒரு காட்சியில் தமிழகத்தின் முக்கிய இரு தலைவர்கள் வேடம் அணிந்தவர்கள் டாஸ்மாக்கில் வந்து சரக்கு கேட்டு கெஞ்சுவதுபோல ஒரு காட்சி வரும். அதனை நீக்கச் சொன்னார்கள். நான் மறுத்தேன். மதுபானக் கடை என்ற படத்தில் கடவுள் வேடம் அணிந்தவர்களே குடிப்பது போலக் காட்டினார்கள். தலைவர்கள் என்ன கடவுள்களை விட பெரியவர்களா? என்று கேட்டேன்.

ஆனால்அதிகாரிகள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள்.அந்த காட்சி உள்பட 18 காட்சிகளை வெட்டச் சொல்லிவிட்டார்கள். அப்படி செய்தும் கூட படத்துக்கு யு/ஏ சான்றிதழ் தான் கொடுத்திருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது சொல்லும் ஒரு படத்தை எடுத்தால் இதுதான் நிலைமையா? என்று வேதனையடைந்தேன். யு/ஏ சான்றிதழ் என்பதால் வரிவிலக்கு கிடைக்காது.
பரவாயில்லை. இளைஞர்கள் நல்வழி செல்ல வேண்டும் என்பதற்காக என் லாபத்தை விட்டுத் தர முடிவு செய்துவிட்டேன்” என்றார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...