கனடாவில் இலங்கைத் தாய்க்கும் மகளுக்கும் நடந்த சோகம்..!

Share this post:

aaa

கனடாவில் கார் விபத்து!! இலங்கையைச் சேர்ந்த தாயும் மகளும் பலி கனடா – ஒன்றாரியோவில் கடந்த வாரம் இடம்பெற்ற வீதிவிபத்து ஒன்றில் இலங்கை வம்சாவளி தாய் ஒருவரும் அவரின் 4 வயது மகளும் மரணமடைந்துள்ளனர்.

குறித்த இருவரும் பயணித்த காருடன், மாற்று திசையில் இருந்து வந்த கார் மோதிய போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்தில் 40 வயதான இனோகா அத்துரலியே லியனகேவாதுகே மற்றும் அவரின் மகளான 4 வயது சாவனி ஆகியோர் பலியாகியுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது,

இவர்கள் 10 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து கனடாவுக்கு குடிபெயர்ந்தவர்கள் என குறிப்பிடப்படுகின்றது.

மேலும், சம்பந்தப்பட்ட மற்றைய காரில் பயணித்த 28 வயதான ஒருவரும் ஐந்தரை மாதங்களேயான குழந்தையும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Share This:
Loading...

Related Posts

Loading...