கத்தி முனையில் கணவனை சிறைப்பிடித்து கணவனின் முன்னே புதுமணப் பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர்கள்..!

Share this post:

kaththi

இந்தியா, உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கை ஆற்றில் குள்ளித்துவிட்டு கணவருடன் சைக்கிளில் வந்து கொண்டிருந்த புதுமணப் பெண்ணை வழிமறித்து, கணவர் கண்ணெதிரே பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொன்றுவிட்டு, தலைமறைவான கும்பலை காவற்துறை தேடி வருகின்றனர்.

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட குறித்த தம்பதியர், கச்லகாட் பகுதியில் ஓடும் கங்கை ஆற்றில் குளிப்பதற்காகசென்றிருந்தனர்.

கங்கையில் நீராடிவிட்டு இந்த தம்பதியர், நேற்று முன்தினம் இரவு சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.

சோரோ என்ற இடத்தின் அருகே அவர்களை ஒரு கும்பல் வழிமறித்து, கத்தி முனையில் கணவரை சிறைபிடித்த அந்த கும்பலை சேர்ந்தவர்கள், அவரது இளம்மனைவியை மாறி, மாறி பாலியல் துஷ்பிரயோகம் செய்து அந்தப் பெண்ணின் கழுத்தை நெரித்துக் கொன்றனர்.

பின்னர், கணவரையும் சரமாரியாக தாக்கி காயப்படுத்திய அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது.

இச்சம்பவம் தொடர்பான தகவல் அறிந்து விரைந்துவந்த காவற்துறை, அந்த இளம்பெண்ணின் சடலத்தை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பிவைத்து, வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்நிலையில், தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகளை காவற்துறை தேடி வருகின்றனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...