தனது 9 மாதங்களேயான குழந்தையை 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்யத பாசக்கார தாய் சிக்கினார்….

Share this post:

baby 9 மாதங்களேயான குழந்தையை 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த தாய் ஒருவர் கண்டி – கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பெண் வெளிநாடு ஒன்றில் பணியாற்றிய நிலையில் கடந்த மூன்றாம் திகதி நாடு திரும்பினார்.

இதன்போது, அவர் தம்முடன் ஒன்பது மாதங்களேயான குழந்தையையும் சுமந்து வந்துள்ளார்.

எனினும், இலங்கையில் உள்ள அவரது சட்டரீதியான கணவர், குழந்தையை பொறுப்பேற்க மறுப்பு தெரிவித்த நிலையில், குழந்தையை 2 ஆயிரம் ரூபாவிற்கு விற்பனை செய்ய குறித்த பெண் தீர்மானித்துள்ளார்.

இதன்போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...