தன்னிலை கெடா வவுனியா UC தர்மேந்திராவை ஊழல் மோசடிக்கு தூண்டும் வவுனியா முக்கியஸ்தர்கள் !

Share this post:

ya

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது அண்மைக்காலமாக அர்த்தமற்ற அல்லது அறிவுக்கு எட்டாத வீண்பழி போடும் புகார்களை ஊடகவியலாளர் மத்தியிலும் துண்டுப்பிரசுரங்கள் ஊடாகவும் பரப்பும் செயல் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் அதிகம் அழுத்திக்கூறப்பட்ட குற்றச்சாட்டு என்ற அடிப்படையில் ” MONARA “என்னும் விளம்பர கொம்பனி தொடர்பான 500.000 ரூபா நிதி மோசடி தொடர்பிலான புலனாய்வு ஊடகவியல் ஒன்றை எமது ஊடகவியலாளர்கள் மேற்கொண்டனர் .

எமது புலனாய்வு ஊடகவியலில் சிக்கிய தகவல்களை வவுனியா மக்களுக்காகவும் சிந்திக்கத்தெரிந்தவர்களுக்காகவும் மற்றும் உள்ளுராட்சி அமைச்சரும் வடக்கு மாகாண முதலமைச்சருமான கெளரவ விக்கினேஸ்வரன் அய்யா அவர்களின் கவனத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்பதற்காகவும் இங்கே வெளியிடுகின்றோம் .

வவுனியா நகரசபை செயலாளர் தர்மேந்திரா மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு.

மொனரா என்னும் விளம்பர நிறுவனம் தனது விளம்பர செயற்பாடுகளுக்கான நகராட்சி கணக்கிற்கு சேரவேண்டிய 500.000 ரூபா பணத்தை இவரிடம் காசோலையாக கொடுத்த போது அதை அவர் இன்னொருவரின் கணக்கில் இட்டு மாற்றம் செய்தமையும் நகராட்சி கணக்குக்கு அந்தப்பணம் வைப்பிடப்படாமையும் மோசடியை உறுதிப்படுத்துகிறது .

விளக்கம்

01.MONARA என்பது வவுனியா நகரசபை எல்லைக்குள் இருக்கும் பேரூந்து நிலையம் போன்ற மக்கள் அதிக பாவனை பிரதேசங்களில் உள்ள சுவர்களை வர்ணம் தீட்டி அதில் ரைனோ ரூபி போன்ற பெரிய வியாபாரங்களுக்கான விளம்பரங்களை போடுதல் அல்லது வரைதல் ஆகும் .

02.வவுனியா நகரசபை வரலாற்றில் முதன்முதலாக, வவுனியா நகரசபை சுவர்களை விளம்பர நிறுவனங்கள் பயன்படுத்துகின்றபோது அவர்களிடம் அறவிடும் பணத்தை கொண்டு வவுனியா நகரசபையின் கீழ் உள்ள அவசரமான சிறு சிறு வேலைகளை செய்யலாம் என நகரசபை RI ,TO போன்றோரின் ஆலோசனைப்படி தர்மேந்திராவால் 500.000ரூபா பணம் காசோலையாக பெறப்பட்டது.

03தர்மேந்திரா வருவதற்கு முன்னர் ஒரு தடவை வவுனியா நாகரசபை விளம்பர நிறுவனம் ஒன்றிற்கு சதுர அடிக்கு 125 ரூபாஅல்லது 200.000 ரூபா என 2012 இல் அறிவித்திருந்தது .ஆனால் UC அறிவித்த அதே நிறுவனம் அந்த ஆண்டும் விளம்பர பணிகளை செய்து முடித்திருந்த போதும் பணம் பெறப்பட்டமைக்கான சான்றுகள் எவையும் இல்லை என்பதே உண்மை.

04.MONARA நிறுவனத்தினால் 22.01.2016 அன்று எழுதப்பட்ட காசோலை தர்மேந்திராவினால் 26.01.2016 அன்று ஒப்பமிட்டு பெறப்பட்டிருக்கின்றது.

05.மறுநாள் 27.01.2016 அன்று சந்தை மற்றும் பேரூந்து நிலையத்தில் கடைகள் வைத்திருப்பவர்களை( ஒரு ஓடையில் வைத்து )வவுனியா நகரசபையின் PHI ஒருவரும் RI இருவரும் MS ஒருவரும் TO ஒருவரும் செயலாளர் தர்மேந்திராவும் சேர்ந்து மாலை 6.00 மணியளவில் சந்தித்து உரையாடிய போது அவர்கள் கேட்டுக்கொண்ட திருத்தவேலைகளை செய்வது என உறுதி கூறப்பட்டது .

06.மறுநாளே “ஞரனம் (B)பில்டேஸ்” என்னும் ஒப்பந்தகாரருக்கு அவ்வேலைகளில்
முக்கியமான திருத்த வேலைகளை செய்வதற்கு என வழங்கப்பட்டது.

07. அப்போது “ஞரனம் (B)பில்டேஸ்” ஒப்பந்தக்காரர் முற்பணம் கேட்ட போதும், செயலாளர் தர்மேந்திரா அந்த MONARA விளம்பர நிறுவனம் கொடுத்த காசோலையை மாற்ற UC சட்டங்கள் இல்லாத காரணத்தினால் வேலையை தொடங்குமாறும் பின்னர் பணம் தரப்படும் எனவும் கூறியுள்ளார் .

08.அந்த MONARA விளம்பர நிறுவனம் கொடுத்த காசோலை தர்மேந்திராவால் “ஞரனம் (B)பில்டேஸ்”ஒப்பந்தக்காரருக்கு மாசிமாத இறுதி வாரத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதுவரை அந்த காசோலை தர்மேந்திராவின் பாதுகாப்பிலேயே இருந்தது .

09.MP சிவமோகன் சொல்வதை போல், அந்த பணம் நகராட்சி கணக்கில் சேர்க்க முடியாது .ஏனென்றால் அது MONARA விளம்பர நிறுவனத்தால் கொடுக்கப்பட்ட அன்பளிப்புப் பணம் .அதை வைப்பிலிட நகராட்சிக்கு அதெற்கென ஒரு கணக்கு தேவை .அப்படி எந்த கணக்கும் வவுனியா UC இல் இருக்கவில்லை .இதை தாராளமாக யாவரும் தீர விசாரித்து அறியலாம் .

10. 26.01.2016 அன்று பெறப்பட்ட MONARA நிறுவனத்தின் காசோலை அடுத்த மாதமே வழங்கப்பட்டு விட்டது.அதுவரையில் அந்த காசோலையை தர்மேந்திரா ஒப்பந்தக்காரரிடம் கொடுக்காமல் அவர் அளவு வேலைகளை செய்ய தொடங்கிய பின்னரே அதை கொடுத்துள்ளார் .காரணம் முற்பணம் கொடுக்கும் படியாகவோ அல்லது கொஞ்சமாய் கொஞ்சமாய் வேலைக்கேட்பவோ கொடுக்க முடியாதவாறு மொத்த 500.000 ரூபாவும் ஒற்றைத்தாளில் இருந்தமையை ஆகும் .

11.அதை மாற்றி கொடுக்க முடியும்ஆனால் UC க்கென வந்த காசோலையை பொருட்கள் சேவைகளை பெற்றுக்கொண்டல்லாமல் ஒருவருடைய கணக்கில் மாற்றுவதோ அல்லது தன்னுடைய கணக்கில் மாற்றுவதோ தவறான செயல்பாடுகள் என்பதை தர்மேந்திரா நன்கு அறிந்திருந்தார் .அதனால் தான் அவர் அந்த காசோலையை தன்னுடைய பாதுகாப்பில் வைத்திருந்து குறுகிய காலத்தில் உரிய நேரத்தில் பயன்படுத்தினார் . .

12. 500.000 ரூபா பணத்தை இன்னொருவரின் கணக்கில் இட்டு மாற்றம் செய்தார் என MP சிவமோகன் கூறிய அந்த இன்னொரு நபர் “ஞரனம் (B)பில்டேஸ்” ஒப்பந்தக்காரர் தான் வேறுயாருமில்லை .

13.பகிரங்கமாக தர்மேந்திரா மீது ஊடகங்கள் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்ட போதிலும் அவர் எந்த ஒரு ஊடக அறிக்கையையும் வழங்காமல் எந்த பதிலும் சொல்லாமல் இருந்து விட்டாரே ஏன் ?என நீங்கள் கேட்பது நியாயமே .அவர் ஒரு அரச ஊழியர் .அவர் ஊடகங்கள் ஊடாக கருத்துக்களை பதில்களை முன்வைக்க வேண்டுமாயின் அனுமதி பெற வேண்டும் .அவர் அனுமதி கோரிய நிலையில் அவருக்கு இன்னமும் அனுமதி கிடைக்கவில்லை .

14.வுவுனியாவை சரியான போக்கில் தான் இந்த தர்மேந்திரா நடத்திவருகிறார் .இப்போதெல்லாம் அரசியல்வாதிகளின் அதட்டல்கள் ,அதிகார நுழைவுகள் ,என எதுவுமில்லை.எல்லா வேலைகளும் UC விதிப்படிதான் நடக்கின்றன.

அப்படியிருக்க எப்படி இந்த பிரச்சினை உருவாக்கப்பட்டது?

அதன் பின்னணி யார் ?

யாருடைய உந்தல் ?

என பல உண்மைகள் எமக்கு கிடைத்துள்ளன .விரைவில் ஆதாரங்களுடன் வெளியிடுவோம் .
தொடரும் ……………….

நன்றி – yarltoday.com

Share This:
Loading...

Related Posts

Loading...