கணவன் கண் முன்னே மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த கும்பல்..!

Share this post:

ga

கணவன் கண் முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார். இச்சம்பவம் தொடர்பாக யாரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை.

இந்தியாவின் உத்தபிரதேச மாநிலம் அனைத்து விதமான மோசமான காரணங்களுக்கும் தொடர்ந்து செய்தியாகி வருவது தொடர்கிறது. சமீபத்தில் சட்டப்பேரவையில் சமாஜ்வாடி அரசு தெரிவித்த தகவலில் மாநிலத்தில் கடந்த 5 மாதங்களில் மட்டும் 1,012 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகி உள்ளது என்று கூறியது. மாநிலத்தில் 4,520 பாலியல் தொல்லை வழக்கும் பதிவாகி உள்ளது என்பதை அரசே ஒப்புக் கொண்டு உள்ளது. இந்நிலையில் மற்றொரு கொடூரச் சம்பவம் அரங்கேறிஉள்ளது, கணவன் கண் முன்னே இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு உள்ளார்.

அலிகார்க் மாவட்டம் காஸ்காஞ் பகுதியில் கங்கையில் குளித்துவிட்டு சைக்கிளில் வீடு திரும்பிய தம்பதியினரை கும்பல் ஒன்று வழிமறித்து உள்ளது. அப்போது கும்பல் இளம்பெண்ணை அவரது கண் முன்னே பாலியல் பலாத்காரம் செய்து உள்ளது. பின்னர் அவரை கழுத்தை நெறித்து கொலை செய்து உள்ளது. காப்பாற்ற முயன்ற வாலிபரையும் கும்பல் தாக்கி உள்ளது. கத்திக்குத்து காயம் அடைந்த வாலிபர் அலிகார் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக இதுவரையில் யாரும் கைது செய்யப்படவில்லை.

பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் முரண்பாடான தகவலை தெரிவித்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண் அவருடைய மாமியார் மற்றும் கணவரால் வரதட்சணை கேட்டு துன்புறுத்தப்பட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Share This:
Loading...

Related Posts

Loading...